தல பொங்கலை கொண்டாடிய சாக்ஷி அகர்வால்… காதல் கணவருடன் விதவிதமான போஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தனது நண்பரான நவனீத் மிஸ்ராவை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் இன்று தல பொங்கலை கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை சாக்ஷி அகர்வால், தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அழகான க்யூட்டான நடிகையான சாக்ஷி அகர்வால், தமிழ் சினிமாவில் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்தார். சினிமாவில் வந்த சின்ன வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி நடித்து வந்த சாக்ஷி. பிரபலமாக வேண்டும் என்றால், அதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல இடம் என்பதை தெரிந்து கொண்ட சாக்ஷி, பிக் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகை சாக்ஷி அகர்வால்: இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் குட்டி குட்டி டவுசருடன் வலம் வந்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

காதல் திருமணம்: இதையடுத்து, சாக்ஷி அகர்வாலுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. கோவாவில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்த நவனீத் மிஸ்ரா என்பவரை தான் சாக்ஷி அகர்வால் காதலித்து வந்த நிலையில்,தங்கள் காதலை பெற்றோரிடம் சொல்லி, அவர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தல பொங்கல்: இந்நிலையில், சாக்ஷி அகர்வால், பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராமில், தனது காதல் கணவருடன் இருக்கும் போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவில் சாக்ஷியின் கணவர் பக்க தமிழ் பையன் போல வேட்டி சட்டையில் அட்டகாசமாக இருக்கிறார். இந்த போட்டோ இணையத்தில் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் சாக்ஷி அகர்வாலுக்கு தல பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை சாக்ஷி அகர்வாலை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











