'அந்த நடிகர் பற்றிப் பேசறதை உடனே நிறுத்தணும், இல்லைனா..' பிரபல பிக்பாஸ் நடிகைக்கு கொலை மிரட்டல்!

By

மும்பை: அந்த நடிகரை பற்றிப் பேசுவதை நிறுத்தவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று பிக்பாஸ் நடிகைக்கு மிரட்டல் வந்துள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகை டெவோலீனா பட்டாசார்ஜி. பரத நாட்டிய கலைஞருமான இவர், சில இந்தி டிவி தொடர்களில் நடித்துள்ளார்.

நகை வடிவமைப்பாளராக மும்பையில் வேலை பார்த்த இவர், டான்ஸ் இண்டியா டான்ஸ் 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சின்னத்திரை

சின்னத்திரை

இதில் கவனிக்கப்பட்ட அவருக்கு, என்டிடிவியில் வெளியான சவாரே சப்கே சப்னே பிரீட்டோ என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்டார் பிளஸ் சேனலில் வெளியான சாத் நிபானா சாதியா மற்றும் தியா அவர் பாதி ஹம் ஆகிய தொடர்களில் நடித்தார். கலர்ஸ் டிவி வெளியான தொடர்களிலும் நடித்தார். இதில் சில தொடர்களில் இவரது நடிப்புப் பேசப்பட்டது.

இந்தி பிக்பாஸ்

இந்தி பிக்பாஸ்

இதையடுத்து கடந்த ஆண்டு இந்தி பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இருந்து மருத்துவ காரணங்களுக்காக அவர் வெளியேறினார். இதில் பங்கேற்ற போது நடிகர் அர்ஹான் கான், ரஸாமி தேசாய் ஆகியோரும் அந்த வீட்டில் இருந்தனர். அப்போது அர்ஹானும் ரஸாமியும் காதலித்தனர். பிறகு பிரிந்துவிட்டனர்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இந்நிலையில் நடிகர் அர்ஹான் கானை நடிகை டெவோலீனா பட்டாசார்ஜி தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தாராம். இந்நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சபீகா என்ற பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெவோலீனா, மும்பை போலீஸ் உதவியை நாடியுள்ளார்.

கடைசி நாள்

கடைசி நாள்

இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த மெசேஜில், அர்ஹான் கானை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறாய். ரஸாமி தேசாய், சித்தார்த் சுக்லாவுடன் சேர்ந்து இதை செய்துவருவது தெரியும். அவர்கள் இருவர் உடலும் காணாமல் போய்விடும். இத்தோடு அர்ஹானை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து பேசினால், அந்த நாள் உனது கடைசி நாளாக இருக்கும்' என்று கூறப்பட்டிருந்தது.

போலீசார் பதில்

போலீசார் பதில்

இதையடுத்து ட்விட்டரில் அதை பதிவிட்டுள்ள டெவோலீனா, மும்பை போலீசுக்கு டேக் செய்து, இந்த பெண்ணிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதைக் கவனியுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மும்பை போலீசார் அவருக்கு பதிலளித்துள்ளனர். உங்கள் தொடர்பு விவரங்களை அனுப்புங்கள், கவனிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X