இருட்டு அறையில்.. 2 ஆம் பாகத்துல இருக்கீங்களா, இல்லையா? பிக்பாஸ் நடிகையிடம் ரசிகர்கள் கேள்வி!
சென்னை: தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிக் பாஸ் நடிகையிடம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்திருக்கிறீர்களா என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
தமிழில், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், நோட்டா. கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்.
இப்போது ஆரவ், ஆஷிமா நர்வால் நடிக்கும் ராஜபீமா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் பிரபலம்
சன் டிவியில் ஒளிபரப்பான மாயா, ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ள யாஷிகா ஆனந்துக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள். அவர்களை ஏமாற்ற விரும்பாத யாஷிகா, அடிக்கடி தனது கிளாமர் ஸ்டில்களை அதில் வெளியிட்டு வருகிறார். பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் லிஸ்ட்டில் யாஷிகா ஆனந்தும் ஒருவர்.

புசு புசுன்னு இருக்கீங்க
ஆரம்பத்தில், உடல் எடை அதிகமாகி இருந்தவரிடம், புசு புசுன்னு இருக்கீங்க என்று சிலர் விமர்சனம் வைக்க, லாக்டவுனில் ஒர்க் அவுட் செய்து உடலைக் குறைத்து ஆளே மாறியிருக்கிறார் இப்போது. சோசியல் மீடியாவில் சமீப காலமாக யாஷிகா வெளியிடும் போட்டோஸ், வைரலாகி வருகிறது.

போட்டோஷூட்
லைக்ஸ்களுக்கும் கமென்ட்களுக்கும் பஞ்சமே இல்லை. யாஷிகா, கடந்த சில நாட்களுக்கு முன், தினம் ஒன்று என வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. பின்னர் அந்த போடோஷூட்டை எப்படி நடத்தினோம் என்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அதுவும் வைரலானது.

ஜாலியான கமென்ட்
இந்நிலையில் இப்போது கடற்கரையில் இருந்தபடி வெளியிட்டுள்ள போட்டோஸும் ஏகப்பட்ட லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ்களை அள்ளி இருக்கிறது. இதற்கு சில ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். சிலர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தோட 2 ஆம் பாகத்துல இருக்கீங்களா? என்று ஆர்வமாகக் கேட்டிருக்கின்றனர்.

தொப்புளில் ரிங்
சிலர் இது கோவளம் பீச்சா, புதுச்சேரி பீச்சா? என்று சிலரும் தொப்புள்ல முத்துமணி மாலைலாம் இருக்கே என்று சிலரும் கூறியுள்ளனர். இன்னொருவர் முதல்ல தொப்புள்ள இருக்கிற ரிங்கை எடுங்க என்று அட்வைஸ் செய்துள்ளார். ஒருவர், உங்க டயட் பிளான் சொல்றீங்களா, ஒல்லியாகணும் என்று கேட்டுள்ளார்.

வேற லெவல்டா
சில நெட்டிசன்ஸ் அவரை, 'அக்கா வேற லெவல்டா, வேற மாதிரி மாதிரி என்று கூறியுள்ளனர். பலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர். ஒரு சிலர், இன்ஸ்டாவுல போட்டோ போடறதை தவிர வேற வேலையே இல்லையா? என்று சாடியுள்ளனர். ஒருவர் உங்க புன்னகை கொள்ளை அழகு என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











