தலைவர் பதவியில் தடுமாறும் இசைவாணி… பதவி பறிக்கப்படும் என எச்சரித்த பிக் பாஸ் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் தலைவராக இசைவாணி செயல்பட்டு வருகிறார். அவர் சிறப்பாக செயல்படாததால் பிக் பாஸ் அவரை அழைத்து எச்சரித்துள்ளார்.
ஏழு பேரின் போட்டோ பொருத்திய பொம்மை கார்டனில் வைக்கப்பட்டு இருந்தது. அதில், பானையை போட்டியில் இல்லாத போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சென்று உடைத்தனர்.
யார் தலைவர் ஆகக்கூடாது என அவர்கள் விரும்புகிறார்களோ அந்த பானையை உடைத்தனர். இதில், இறுதிவரை உடையாமல் இருந்த அபினை தலைவர் போட்டியில் ஜெயித்தார். ஆனால், நெருப்பு நாணயத்தை பயன்படுத்தி இசைவாணி இந்த வாரத்தின் தலைவர் ஆனார்.

வீட்டின் சர்வர்
இதனால், இந்த வாரம் முழுவதும் இசைவாணி வீட்டின் சர்வர் ஆக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் யாராவது சாப்பிட விரும்பினால் மணி அடித்து இசைவாணியிடம் கேட்க வேண்டும், அவர் தான் உணவை கொடுப்பார். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து, தட்டை எடுத்துச்சென்று கழுவ வேண்டும் என பிக் பாஸ் கூறி யிருந்தார்.

பிக் பாஸ் அட்வைஸ்
இதையடுத்து, இந்த எபிசோடு தொடங்கியதும், இசைவாணியை அழைத்த பிக் பாஸ், இந்த வாரம் இந்த வீட்டின் நீங்கள் தலைவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை நீங்கள் சரியாக செய்யவில்லை. காலையில் அனைவரும் காஃபி கப்பை கையில் வைத்துக்கொண்டு இருந்தார்கள், நீங்கள் ஏன் அதை வாங்கவில்லை என்று அதட்டினார்.

தலைவர் பதவி பறிக்கப்படும்
ஹவுஸ்மெட்டுகள் அனைவரும் கேப்டன் பதவிக்கான போட்டியில் மிகவும் கஷ்டப்பட்டு விளையாடினார்கள். ஆனால் நீங்கள் நாணயத்தை பயன்படுத்தி தலைவரை பதவியை ஈசியாக பெற்று தலைவராகி விட்டீர்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால் தலைவர் பதவி பறிக்கப்படும் என்று பிக் பாஸ் கூறினார்.

ஸ்ரிட் ஆர்டர்
பிக் பாஸின் இந்த அறிவிப்பால், கடுப்பான இசைவாணி, போட்டியாளர்களுக்கு கடுமையான கட்டளைகளை போட்டார்.இனிமேல் என்னை கேட்காமல் யாரும் எதையும் சாப்பிடக்கூடாது என்று ஸ்ரிட் ஆர்டர் போட்டார்.


Click it and Unblock the Notifications











