குடும்ப மானமே போச்சு.. அவ உங்களுக்கு வேண்டாம்.. ஐஷு தாயாரின் சோகப்பதிவு!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஷு நிக்சனுடன் நெருக்கமாக பழகி வருவதால், அவரது தாயார் உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் மணிசந்திராவும், ரவீணாவின் காதலை தாண்டி ஐஷு நிக்சனும் ஓவராக நெருக்கமாக பழகி வருகின்றனர்.

இது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மிக்சர் பார்ட்டி கூட இருக்கட்டும் ஐஷுவை முதலில் வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸ் பிரியர்கள் போர் கொடி தூக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது, மணியும், ரவீணாவும் நெருங்கி பழகினார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இருவரும் விளையாட்டு மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதெல்லாம் ஒன்னுமே இல்லை என்கிற அளவுக்கு நிக்சனும், ஐஷு நடந்து கொள்கிறார்கள்.
முகம் சுளிக்கும் ரசிகர்கள்: நிக்சனை தம்பி, தம்பினு சொல்லிவிட்டு தற்போது அவருக்கு ஐஷு முத்தம் கொடுப்பது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. காதலை விட இங்கு டச்சிங் தான் அதிகம் இருக்கிறது. உன் கண் அழகா இருக்கு, மூக்கு அழகா இருக்குனு ஐஷுவை தொட்டு தொட்டு பேசுகிறார் நிக்சன். பிக் பாஸ் வீட்டை லவ் வீடாக மாற்றிக் கொண்டிருக்கிறது. நிக்சன். ஐஷுவும், நிக்சனும் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.
உருக்கமான பதிவு: இந்நிலையில், ஐஷுவின் தாயார் ஐஷு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐஷு எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு… இந்த ஐஷு வேண்டாம் எங்களுக்கு.. நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க விரும்புகிறோம் அப்படி நீ இரு.. எது உண்மை எது பொய் என்று விரைவில் உணர்வாய் என நம்புகிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஐஷுவை வெளியில அனுப்புங்க: மேலும், இந்த வாரம் ஐஷுவை வெளியேற்றுமாறு பார்வையாளர்கள் பலர் இணையத்தில் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு மேல் அவர் வீட்டில் இருந்தால், குடும்ப மானத்தை மொத்தமாக வாங்கிவிடுவார் என்றும், நிக்சனையும் அவர் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் திசை திருப்புகிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











