இருவரும் அண்ணன் தங்கை தான்..கேப்ரில்லாவுடன் காதல் இல்லை..பிக் பாஸ் ஆஜித் சொன்ன தகவல்!

சென்னை : எனக்கும் கேப்ரில்லாவுக்கும் காதல் இல்லை என்று பிக் பாஸ் ஆஜித் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகி பிரபலமான ஆஜித் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

இதில் தன்னுடன் சகபோட்டியாளராக கலந்து கொண்ட கேப்ரில்லாவிடம் நட்பாக பழகினார்.நிகழ்ச்சிக்கு பின்பும் இருவரும் அதே நட்புடன் இருந்து வருகின்றனர்.\

கேப்ரியெல்லா

கேப்ரியெல்லா

கேப்ரியெல்லா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியா என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகி கேப்ரியெல்லாவின் நடிப்புக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலில் காவியா பார்த்திபன் ரொமான்ஸ் அட்டகாசமாக இருக்கும்.

சொந்தமாக யூடியூப் சேனல்

சொந்தமாக யூடியூப் சேனல்

கேப்ரியெல்லா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் ஈரமான ரோஜாவே காவ்யா மேக்கப், நியூ கார் வாங்கிய வீடியோ, ஆஜித்துடன் இணைந்து பல ரீல் வீடியோக்களை அப்லோட் செய்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார். கேபிரில்லாவும், ஆஜித்தும் அடிக்கடி சந்திக்கும் போட்டோவையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

எலியும் பூனையுமாக சண்டை

எலியும் பூனையுமாக சண்டை

இதனால், இவர்கள் இருவம் காதலிப்பதாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் கேப்ரில்லாவை லவ் பண்றீங்களா? என்ற கேள்விக்கு சமீபத்தில் மனம் திறந்து பதில் அளித்த ஆஜித், பிக்பாஸ் வீட்டில் நானும் கேபியும் எலியும் பூனையுமாக அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். எங்களது சண்டை டிவியில் அவ்வளவாக காட்டவில்லை.

காதல் இல்லை

காதல் இல்லை

சண்டை போட்டாலும் உடனே நாங்கள் சேர்ந்து விடுவோம். எப்போதும் எங்களுக்குள் காதல் உண்டானதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கையாகத்தான் பழகி வருகிறோம் இதற்கு மேல் விளக்கம் வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றும் ஆஜித் தெரிவித்தார். அவருடைய இந்த பதில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X