Pavani home tour : குடும்பத்தோட லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறோம்.. ஹோம் டூரில் உளறிய பாவனி !

சென்னை : காதல் ஜோடியான அமீர் மற்றும் பாவனி லிவ்விங்டு ரிலேஷன் ஷிப்பில் இருக்கின்றனர். அவர்களின் வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சின்னத்திரையில் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பாவனி.

அவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் பாவனி.

பிக் பாஸ் : பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்ததுமே, தனது க்யூட்டான அழகாலும், கொஞ்சி பேசிய தமிழிலும் ஏகத்திற்கும் பிரபலமாகி விட்டார். இந்த நிகழ்ச்சியில், வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர் வந்ததுமே பாவனியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார்.

காதல் ஜோடி : பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ஜோடியாக கலந்து கொண்டனர். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்டார். அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

bigg boss Amir and pavanis home tour video revealed facts

இயக்குநர் அவதாரம் : துணிவு படத்தில் நடிக்க அமீருக்கும் பாவனியும் நடித்த நிலையில் டான்ஸ் மாஸ்டராக இருந்த அமீர் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் அமீர் மற்றும் பாவனி நடிக்க உள்ளனர். அதற்கான பூஜை அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த படத்திற்கு ஷபீர் சுல்தா என்பவர் இசையமைக்க உள்ளார்.

லிவ்விங் ரிலேஷன் ஷிப் : காதல் ஜோடி புறாவாக வலம் இந்த ஜோடி தற்போது லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருந்து வருகின்றனர். தற்போது இவர்களின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீட்டில் அமீர் தனது பெரியம்மா மற்றும் அண்ணன் மற்றும் பாவனியுடன் குடும்பமாக லிவ்விங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறோம். எங்க அம்மாவே அமீர் கூட இரு என்று அனுப்பி வைத்தார்கள் என்று பாவனி உளறினார்.

bigg boss Amir and pavanis home tour video revealed facts

அழகான வீடு : அந்த வீட்டின் ஹாலில் பாவனிக்கு பிடித்த நிறத்தில பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அதே போல அமீர் பாவனி இருவருக்குமே தனித்தனி படுக்கை அறை, பாவனி தனது பெட்ரூமில் விலைஉயர்ந்த தரைவிரிப்பு,கைவினைப் பொருட்களை அலங்காரத்திற்காக வைத்துள்ளார். அதேபோல சமையல் அறையில் கண்ணாடி ஜாடிகள், மரத்தால் செய்யப்பட்ட அஞ்சறைப்பெட்டி என ஒவ்வொரு பொருளையும் பாவனி பார்த்து பார்த்து வாங்கியதாக அமீர் கூறினார். அழகான க்யூட்டான இந்த வீட்டைப்பார்த்து ரசிகர்கள் வியந்த போனார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X