Amir Pavni: ஹீரோவும் அவர் தான்.. இயக்குநரும் அவர் தான்.. பாவனிக்கு இனி எல்லாமே அமீர் தான்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட அமீர் மற்றும் பாவனி சினிமாவில் பெரியளவில் சாதித்து விட்டு பின்னர் திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஹீரோவாக அமீரும், ஹீரோயினாக பாவனியும் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. அதன் அட்டகாசமான புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் ஷேர் செய்துள்ளார்.

Bigg Boss Amir and Pavni shares muhurat pooja stills for their new movie

மேலும், இந்த படத்தை அமீர் தான் இயக்கப்போகிறார் என்கிற சூப்பரான அப்டேட்டையும் பாவனி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பற்றிய காதல்: ஆரவ் - ஓவியா, ஹரிஷ் கல்யாண் - ரைசா, கவின் - லாஸ்லியா, அசல் கோலார் - நிவாஷினி என ஏகப்பட்ட காதல் கதைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறினாலும், ஷோவுக்கு பிறகு தொடரும் உண்மையான காதலாக அமீர் மற்றும் பாவனியின் காதல் தான் தொடர்ந்து வருகிறது.

இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடி போட்டு ஆடிய நிலையில், அடுத்ததாக ஹீரோ - ஹீரோயினாக புதிய படத்தில் நடிக்கப் போகின்றனர். அதற்கான பூஜை சென்னையில் நேற்று விமரிசையாக பிரபலங்கள் பங்கேற்க நடைபெற்றது.

Bigg Boss Amir and Pavni shares muhurat pooja stills for their new movie

அஜித் கொடுத்த துணிவு: துணிவு படத்தில் நடிக்க அமீருக்கும் பாவனிக்கும் நடிகர் அஜித் வாய்ப்பு கொடுத்த நிலையில், சின்னத்திரையில் இருந்து இருவரும் வெள்ளித்திரையில் அறிமுகமானார்கள். இந்நிலையில், அந்த துணிவை கொண்டு அடுத்ததாக புதிய படத்தில் ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் அமீர் மற்றும் பாவனி நடிக்க உள்ளனர். அதற்கான பூஜை நேற்று நடந்த நிலையில், அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பாவனி ஷேர் செய்துள்ளார்.

Bigg Boss Amir and Pavni shares muhurat pooja stills for their new movie

ஹீரோவும் இயக்குநரும்: ஸ்ரீநல்ல வீரப்பசாமி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக உருவாகும் இந்த படத்தை அமீரே இயக்கி ஹீரோவாகவும் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடன இயக்குநராக இருந்து வந்த அமீர் முதல்முறையாக இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் வரிசையில் அமீரும் இயக்கி நடிக்க உள்ள நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை அமீர் மற்றும் பாவனியின் புதிய படத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X