அஜித்துடன் அமீர்-பாவனி ஜோடியின் கலக்கல் படம்..சிபியும் இருக்காரே..அப்ப அந்த செய்தி உண்மைதானா?
சென்னை : துணிவு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலங்கள் அஜித்துடன் இருக்கும் போட்டோவை அப்லோடு செய்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு அஜித்குமார் 3வது முறையாக ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அசுரன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்றோர் படத்தில் கமிட்டாகி உள்ளனர்.

அந்த சென்டிமெண்ட் இல்லை
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாக அஜித்தின் படத்திற்கு வீரம், விஸ்வாசம், விவேகம், வலிமை, என 'V' சென்டிமெண்ட் தான் பெயர் வைக்கப்படும் ஆனால், இப்படத்திற்கு தற்போது துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதுதான் கதை
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் கதை பஞ்சாப்பில் 1987ம் ஆண்டு நடந்த வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த கொள்ளையர்கள் போலீசை உடையணிந்து பேங்க் ஊழியர்களை மிரட்டி 6 கோடியை கொள்ளை அடித்து சென்றனர்.

நெகடிவ் ரோல்
1987ம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் 2019ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 13 பேரில்9 பேருக்கு தண்டனை வழங்கியது. பெரும் பரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டவர் லாப் சிங் தான். இந்த லாப் சிங் கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருவதால், மீண்டும் ஒரு மங்காத்தா படத்தை காண ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள்.

அஜித்துடன் பிக்பாஸ் ஜோடி
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல ஜோடியான அமீர் மற்றும் பாவனி இருவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணைந்தனர் .பாங்காங்கில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோக்களை அப்லோடு செய்துள்ளனர். என்ன சொல்வது? எப்படி செல்வது என்று தனது பூரிப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், அற்புதமான மனிதர் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாக உள்ளது.


Click it and Unblock the Notifications











