பிக் பாஸ் போட்ட கண்டிஷன்.. கதறி அழுத அர்ச்சனா.. பதறி போன ஹவுஸ்மேட்ஸ்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: காடா? நாடா? டாஸ்க் மாலை நேரம் ஆனவுடன் சங்கு சத்தம் ஒலிக்கப்பட்டு போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார்.

பின்னர் மேக்கப்பை எல்லாம் கலைத்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பிக் பாஸ் போட்டியாளர்கள், பிக் பாஸின் அறிவிப்புக்காக சோபாவில் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போ, பிக் பாஸ் அறிவிப்புடன் ரியோ ராஜ் பேசியதை கேட்ட அர்ச்சனா, தாங்க முடியாமல் கதறி அழுது விட்டார்.

அரசர்கள் vs அரக்கர்கள்

அரசர்கள் vs அரக்கர்கள்

காடா? நாடா? டாஸ்க் போட்டு அரசர்கள், அரக்கர்கள் என பிக் பாஸ் வீட்டு போட்டியாளர்களை 8 பேர் கொண்ட இரு பிரிவுகளாக பிரித்து, ஃபேஷன் டிரெஸ் போட்டி போல மேக்கப் போட்டுக் கொண்டு, அரக்கர்களிடம் இருந்து தப்பிக்க, அவர்கள் செய்யும் அட்டகாசத்தை பொறுத்துக் கொண்டு அமைதியாக ஆடாமல் அசையாமல் இருந்து ஜெயிக்க வேண்டும் என்கிற டாஸ்க் ரசிகர்களுக்கு ரொம்பவே ஜாலியா இருந்துச்சு..

லீடிங்கில் சொர்க்கபுரி

லீடிங்கில் சொர்க்கபுரி

இதுவரை சொர்க்கபுரியை சேர்ந்த சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் ரியோ ராஜ் அரக்கர்கள் மத்தியில் வெற்றி பெற்று லீடிங்கில் உள்ளனர். சோமசேகர் மற்றும் பாலாஜி முருகதாஸ் தோற்றுப் போய் அரக்கர்களாக மாறி விட்டனர். இந்த போட்டியில் யார் ஜெயிக்கப் போறாங்கன்னு இன்னைக்கு தெரிந்து விடும்.

நார்மல் மோட்

நார்மல் மோட்

மாலை 6 மணி ஆனதும், சங்கு நாதம் ஒலிக்கப்பட்டு பிக் பாஸ் கட்டளையின் பேரில், அனைத்து ஹவுஸ்மேட்களும் நார்மல் மோடுக்கு மாறி, தங்கள் மேக்கப்பை எல்லாம் கலைத்து விட்டனர். பாலாஜி புதுசா ஒரு பிக் பாஸ் கண்டிஷனோடு வந்து சக போட்டியாளர்கள் முன்னிலையில் அதனை படிக்க ஆரம்பித்தார்.

எரிவாயுவுக்கும் தண்ணிக்கும் மீட்டர்

எரிவாயுவுக்கும் தண்ணிக்கும் மீட்டர்

பிக் பாஸ் வீட்டில் இனி கொடுக்கிறதை வச்சி வாழ கத்துக்கோங்க என்கிற புதிய ரூலை பிக் பாஸ் போட்டு ஹவுஸ்மேட்களை அலறவிட்டார். ஒரு வாரத்திற்கு வெறும் 5 கிலோ எரிவாயு தான் என்றும், பாத்ரூமுக்கு 2000 லிட்டர் தண்ணீர், கிச்சன் ஏரியாவுக்கு 1000 லிட்டர் தண்ணீர் தான் என்றும், இனி அத்தியாவசிய பொருளை தவிர வேறு ஏதும் கொடுக்கப்பட மாட்டாது என்றார்.

கண்டிப்பா பத்தாது

கண்டிப்பா பத்தாது

16 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு வாரம் சமைக்கணும்னா, காஸ் 7 முதல் 8 கிலோ வரை ஆகும். சிக்கனமாத்தான் பண்றோம். அதுல குறைச்சா கண்டிப்பா வார இறுதி நாட்களில், வெறும் தயிர் சாதம், மோர் சாதம் தான் கொடுக்க முடியும். அதுவும் கிடைக்குமா என்பது டவுட்டு தான் என அர்ச்சனா தெளிவா சொன்னப்ப, ரியோ, அதுக்குத்தான் கடைசியா கொடுக்கிறதை வச்சி வாழணும்னு சொல்லி இருக்கிறார் என்றதும் அர்ச்சனா ரொம்பவே அப்செட் ஆகிட்டாங்க.

வெடித்து அழுத அர்ச்சனா

வெடித்து அழுத அர்ச்சனா

உணவு பற்றாக்குறை ஆகிடுமோ, ஹவுஸ்மேட்களுக்கு சரியா சாப்பாடு கொடுக்க முடியாம போகிடுமோ என நினைத்து ரொம்பவே மனம் வெடித்து அர்ச்சனா அக்கா அழுததை பார்த்த அத்தனை ஹவுஸ்மேட்களும் பதறி போய் அவரை சமாதானப் படுத்தினர். ஆஜீத் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வேல் முருகன் வழக்கம் போல கட்டித் தழுவி சினேகன் வேலையை பண்ண ஆரம்பித்து விட்டார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Day 15 Highlights | Nominations
எதிர்த்து பொங்கிய அர்ச்சனா

எதிர்த்து பொங்கிய அர்ச்சனா

என்ன சண்டை வேணா போடலாம், என்ன கேம் வேணா ஆடலாம். ஆனால், இப்படி வயித்துல அடிக்கிறது ரொம்பவே தப்பு என பிக் பாஸையே அர்ச்சனா அக்கா எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார். பாலாஜி, சோம்ஸ், ரியோ, நிஷா, அனிதா என அனைவரும் அவரை சமாதானப்படுத்தினர். நான் இனிமே பாலில் தண்ணி கலந்து போடுறேன் என நிஷா காமெடி பண்ண, தண்ணியில தான் பாலே கலக்க வேண்டிய சூழல் என அர்ச்சனா அப்போதும் பொங்கியபடியே நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X