பெரிய மிஸ்டேக் பண்ண பாலா.. கேப்டன் ஆக்கிய பிக் பாஸ்.. கடைசியில செம ட்விஸ்ட்.. உண்மை வெல்லும்!

சென்னை: கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸ் வின்னர் என பிக்பாஸ் அறிவித்த நிலையில், கடைசியில் செம ட்விஸ்ட் நடந்தது.

அடுத்த வாரத்திற்கான பிக் பாஸ் வீட்டின் கேப்டனை தேர்ந்தெடுக்கும் போட்டியில், நிஷா, ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி முருகதாஸ் போட்டியிட்டனர்.

பஸர் அடிக்கும் போது முதலில் முடித்தது பாலா தான் என ஹவுஸ்மேட்கள் கொண்டாட, பிக் பாஸும் வாழ்த்துக்கள் பாலா என அவரை கேப்டனாக்கி விட்டார்.

கடும் போட்டி

கடும் போட்டி

கொடுக்கப்பட்ட பிளாக்குகளை வைத்து தங்கள் உருவத்தை ரம்யா, நிஷா மற்றும் பாலா சரியாக பொருத்த போராடினர். ஆரம்பத்தில் இருந்தே நிஷா வழக்கம் போல சொதப்பினார். கேப்டன் எனும் எழுத்துக்களை அழகாக புரிந்து கொண்ட பாலா மற்றும் ரம்யா அதை அடிப்படையாகக் கொண்டு பிளாக்குகளை அடுக்கி தங்கள் உருவத்தை வரவைத்தனர்.

உற்சாகப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ்

உற்சாகப்படுத்திய ஹவுஸ்மேட்ஸ்

கமான் பாலா என்றும், கமான் ரம்யா என்றும் ஹவுஸ்மேட்கள் உற்சாக குரல்களை எழுப்பி தங்களது ஆதரவை கொடுத்து போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர். நிஷா என்ன கேம் ஆடுதுன்னே தெரியலையேன்னு ரியோவும் அர்ச்சனாவும் கமெண்ட் அடித்த போது, நிஷா அக்கா பொறுமையா பார்த்து விளையாடு என கேபி அவரை கவனிக்க தூண்டினார்.

கேப்டன் ஆன பாலா

கேப்டன் ஆன பாலா

ஹவுஸ்மேட்ஸ் அனைவரும், யார் வெற்றி பெற்றாங்க, யார் ஒழுங்கா விளையாடுனாங்கன்னு பார்க்காமல், பஸர் அடித்ததும் முதலில் அடுக்கி முடித்த பாலாஜியை கொண்டாட ஆரம்பித்ததும், பிக் பாஸ் உடனே வாழ்த்துக்கள் பாலா.. நீங்க தான் அடுத்த வார கேப்டன் என்றே அறிவித்து விட்டார்.

மனசாட்சி கேட்கல

மனசாட்சி கேட்கல

போன வாரம் கமல் ரோஸ்ட் பண்ணியதில் டோட்டலாக நல்லவனா மாறிவிட்ட பாலா, தான் அடுக்கியதில் தவறு இருப்பதாகவும், ரம்யா தான் ரியல் வின்னர் என்றும் இதை மறைத்து கேப்டனாக ஆக தனது மனசாட்சி இடம் கொடுக்காது என்றும் பேசி ரசிகர்கள் மனங்களையும், போட்டியாளர்கள் மனங்களையும் கவர்ந்து விட்டார்.

தெரிந்தும் மறைத்த அனிதா

தெரிந்தும் மறைத்த அனிதா

ஆமாம், நான் பார்த்தேன் என்பது போல அனிதா சம்பத், பாலாவின் சட்டை பிளாக் ஒன்று டிசைன் மாறி அடுக்கப்பட்டது என்றார். இதுவே நிஷா அடுக்கி இருந்தால், முதல் ஆளாக கத்தி கூச்சலிட்டு இருப்பார். ஆனால், பாலா என்பதால், அவருக்கு அனிதா ஃபேவர் பண்ணி வாயை மூடிக் கொண்டார்.

தேர்ட் அம்பயர் கண்ணாடி போடல

தேர்ட் அம்பயர் கண்ணாடி போடல

கண்டு கொள்ளாத மாதிரி விட்டு, கமல் சார் எபிசோடுக்கு வழிவகை செய்ய நினைத்த பிக் பாஸின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் இந்த முறை பாலா உண்மையை ஒப்புக் கொண்டதும், மன்னிப்புக் கேட்ட பிக் பாஸ், தேர்ட் அம்பயர் கண்ணாடி போடல, அதனால இந்த தப்பு நடந்துடுச்சு என நல்லாவே சமாளித்தார். அது வேற யாரும் இல்லை. அவரே தான்.

உண்மை வெல்லும்

உண்மை வெல்லும்

பிக் பாஸ் வீட்டில் அன்பு ஜெயிக்குமா.. குரூபிசம் ஜெயிக்குமான்னு தெரியல, நேற்றைய நிகழ்ச்சியில் உண்மை ஜெயித்தது. பாலாவுக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவியை மாற்றி ரியல் வின்னரான ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் கொடுத்து விட்டார். கண்டிப்பா அப்போ இந்த வாரம் முதலில் சேவ் ஆகப் போறது ரம்யா தான் என்று தெரிந்து விட்டது.

Recommended Video

Pambattam Movie Pooja | Jeevan, Yashika Anand, Director V.C.Vadivudaiyan
ராயல் சல்யூட்

ராயல் சல்யூட்

பாலாஜி முருகதாஸ் முதல் முறையா இந்த பிக் பாஸ் வீட்டில் உண்மையை பேசியிருக்கார் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் அவருக்கு எழுந்து நின்று கை தட்டி பாராட்டுத் தெரிவித்தனர். ஜித்தன் ரமேஷ் எல்லாம் ராயல் சல்யூட்டே அடித்து விட்டார். பிக் பாஸும் பாலாஜியை வாழ்த்தினார். பைனலுக்கு பாலாஜி பார்சல்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X