இறங்குற எஸ்கலேட்டர்ல பிக் பாஸ் அர்ச்சனா பண்ண வேலையை பாருங்க.. பங்கமா கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி அர்ச்சனாவின் லேட்டஸ்ட் எஸ்கலேட்டர் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

லைக்ஸ் மற்றும் வியூஸ்க்காக புதிது புதிதாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அர்ச்சனா. சமீபத்தில் மாணவர்கள் டாய்லெட் டூர் பற்றி கலாய்த்து பேசியதை விளாசி ஸ்கோர் செய்திருந்தார்.

கணவரை பிரியப் போவதாகவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருந்தார் பிக் பாஸ் அர்ச்சனா.

டிரெண்டாகணும்

டிரெண்டாகணும்

பாத்ரூம் டூர் வீடியோவை தனது மகள் ஸாராவுடன் இணைந்து வெளியிட்டு வேறலெவலில் டிரெண்டானார் பிக் பாஸ் அர்ச்சனா. எந்தவொரு வீடியோவையோ அல்லது போட்டோவையோ வெளியிட்டாலும், அது சோஷியல் மீடியா டிரெண்டாக என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் அர்ச்சனா அதற்கேற்ப கோல் போட்டு வருகிறார் என விமர்சனங்களும் கிளம்பி வருகின்றன.

ரொம்ப டாக்ஸிக்

ரொம்ப டாக்ஸிக்

சமூக வலைதளத்தில் தனக்கு மட்டுமே எப்போதும் நெகட்டிவிட்டி வருகிறது, டாக்ஸிக் பரவுகிறது என்பதை போலவே தொடர்ந்து பேசியே ரசிகர்கள் ஆதரவை அன்பு கேங்கை ஆரம்பித்த அர்ச்சனா பெற்று வருகிறார் என்றும் நெட்டிசன்கள் இவரை சமீப காலமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

கணவரை பிரிய முடிவு

கணவரை பிரிய முடிவு

சமீபத்தில், தனது கணவரை பிரியப் போவதாக முடிவு செய்து விட்டேன் என்றே சொல்லி பரபரப்பை கிளப்பி இருந்தார் அர்ச்சனா. ஆனால், கடைசியாக தனது மகள் ஸாரா எடுத்துச் சொல்ல கணவனும் மனைவியும் ஸாராவின் பேச்சை மதித்து மாறிவிட்டோம் என மகளுக்கான கிரெடிட்டையும் கொடுத்திருந்தார். ஆனால், அர்ச்சனாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே இன்னமும் சிக்கல்கள் தீரவில்லை என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

எஸ்கலேட்டரில் தலை கீழாக

எஸ்கலேட்டரில் தலை கீழாக

இறங்கும் எஸ்கலேட்டரில் ஏறும் முயற்சியை ஏகப்பட்ட பேர் செய்து வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அதே போன்றதொரு முயற்சியை அர்ச்சனாவும் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்காக எடுத்து வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இது ரொம்ப கஷ்டம் என்றும் எப்புர்ரா என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

தேவையில்லாத வேலை

அர்ச்சனாவின் வீடியோக்களுக்கு லைக்ஸ் மற்றும் ஆதரவான கமெண்ட்டுகள் வருவதை போலவே ட்ரோல்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் தேவையில்லாத வேலை என்றும் இன்னமும் எங்களை பைத்தியக்காரங்கண்ணே நினைச்சிட்டு இருக்கீங்களா என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X