அடேங்கப்பா.. சித்தியுடன் லியோ பாட்டுக்கு ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா மகள்.. சும்மா தெறிக்குது!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "நா ரெடி" பாடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், தொகுப்பாளினிகள் என பலரும் ரீல்ஸ் செய்து போட்டு வருகின்றனர்.

விஜய் படத்தின் பாடல்கள் வந்தாலே உலகளவில் டிரெண்டாகி வருவது இயல்பாகவே உள்ளது. குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், அரபிக் குத்து, ரஞ்சிதமே வரிசையில் தற்போது சர்ச்சைகளை மீறி "நா ரெடி" பாடல் டிரெண்டாகி வருகிறது.

Bigg Boss Archana daughter and sister dance for Vijays Leo Naa Ready song

நடிகர் விஜய் தம்மடித்தால் என்ன, சரக்கு அடித்தால் என்ன சூப்பராக டான்ஸ் ஆடுகிறார் அது போதும் நாங்களும் ரீல்ஸ் போடுவோம் என தற்போது அர்ச்சனாவின் மகளும் அர்ச்சனாவின் தங்கையும் போட்டுள்ள நடன வீடியோ இளைஞர்கள் மத்தியில் கவனத்தை கவர்ந்துள்ளது.

50 மில்லியனை நெருங்குது: கடந்த ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "நா ரெடி" பாடல் வெளியானது.

அனிருத் இசையில் விஷ்ணு எடவன் வரிகளில் விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் இணைந்து அந்த பாடலை பாடினர். அந்த பாடல் வெளியாகி 11 நாட்கள் ஆகும் நிலையில், 45 மில்லியனுக்கும் அதிகமான வியூஸை அள்ளி உள்ளது. விரைவில் 50 மில்லியன் வியூஸை "நா ரெடி" பாடல் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிமேகலை போட்ட ஆட்டம்: சமீபத்தில் லியோ படத்தின் நா ரெடி பாடலுக்கு விஜே மணிமேகலை அமெரிக்காவில் செம டான்ஸ் ஆடிய ரீல்ஸை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஏகப்பட்ட விஜய் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளினார்.

இந்நிலையில், பிரபல தொகுப்பாளினி மற்றும் பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் தங்கையும் அர்ச்சனாவின் மகளும் அந்த பாடலுக்கு போட்டுள்ள நடன வீடியோ வெளியாகி பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

சித்தியுடன் ஸாரா: பிக் பாஸ் அர்ச்சனாவின் தங்கை அனிதா மற்றும் அர்ச்சனாவின் மகள் ஸாரா இருவரும் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "நா ரெடி தான் வரவா" பாடலுக்கு செம டான்ஸ் போட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

அர்ச்சனாவை போலவே அவரது மகள் ஸாராவும் மீடியாவில் தொகுப்பாளினியாக இப்போதே வலம் வர ஆரம்பித்து விட்டார். மேலும், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் அம்மாவுடன் இணைந்து நடித்த ஸாரா ஏகப்பட்ட இளைஞர்களை கவரும் விதமாக அடிக்கடி வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X