இவருதான் சூப்பர்ஸ்டார்.. பிக் பாஸ் அர்ச்சனா கொடுத்த பட்டம்.. ஆடிப்போன டிடி.. அந்த மனசு இருக்கே!
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி தான் சின்னத்திரை சூப்பர்ஸ்டார் என பிக் பாஸ் அர்ச்சனா பட்டம் கொடுத்து பாராட்டியது டிடி நீலகண்டன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி நீலகண்டன் சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மத்தகம் வெப்சீரிஸிலும் டிடியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜீ தமிழில் டாப் தொகுப்பாளினியாக வலம் வரும் அர்ச்சனாவும் பல ஆண்டுகளாக விஜேவாக வலம் வரும் நிலையில், விஜே உலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது டிடி தான் என பாராட்டி உள்ளார்.
ஒரே சூப்பர்ஸ்டார்: சினிமாவில் எப்படி ஒரே சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்பது போல சின்னத்திரையில் டிடி தான் சூப்பர்ஸ்டார் என சமீபத்தில் நடைபெற்ற டிடி நீலகண்டன் ஃபேன்ஸ் மீட் நிகழ்ச்சியின் போது வீடியோ காலில் பேசிய விஜே அர்ச்சனா பாராட்டி ரசிகர்களையும் டிடி நீலகண்டனையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
விஜய் டிவியின் காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்கள் யாராக இருந்தாலும், அவர்களை ராஜா ராணியை போல மதித்து அவர்களின் அத்தனை சிறப்புகளையும் வெளிக்கொண்டு வந்து அந்த பேட்டியை எந்தவொரு ரசிகருக்கும் போர் அடிக்காத வண்ணம் கொடுப்பதில் டிடியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என பாராட்டினார்.
பட்டமே வேண்டாம்: பிக் பாஸ் புகழ் அர்ச்சனாவின் பாராட்டுக்களை பார்த்து சந்தோஷப்பட்ட டிடி நீலகண்டன் அவங்களே பெரிய ஆங்கர் அவங்க இப்படி பாராட்டுறது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். ஆனால், இந்த பட்டத்துக்கு நான் தகுதியானவள் கிடையாது. என்னை விட திறமையான பல தொகுப்பாளர்கள் இங்கே உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
ரஜினிக்கு மகள் அல்லது விஜய்க்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இந்த இரண்டில் எந்த ஒன்றை சூஸ் பண்ணுவீங்க என்கிற கேள்விக்கு, ரொம்ப கஷ்டமான கேள்வியாச்சே என யோசித்த டிடி நீலகண்டன் விஜய்க்கு ஜோடி என்று பதில் அளித்து தான் ஒரு தளபதி ரசிகை என்பதை நிரூபித்து விட்டார்.
மேலும், நான் ரெடி தான் பாடலில் விஜய் நடனமாடிய விதத்தை வர்ணித்து, அவரது க்யூட்னஸை ரசித்துப் பேசிய டிடி நீலகண்டன் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரை ஆளுமைகள் குறித்தும் தனது கருத்துக்களை அந்த பேட்டியில் பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











