பிக்பாஸ் அருண் - அர்ச்சனா திருமணம் எப்போ தெரியுமா?.. அவர்களே சொன்ன குட் நியூஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் அர்ச்சனாவும், எட்டாவது சீசனில் அருணும் கலந்துகொண்டார்கள். இவர்களில் அருண் எட்டாவது சீசனின் பாதியிலேயே எவிக்ட் ஆனாலும்; அர்ச்சனா 7ஆவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக உள்ளே சென்று டைட்டிலை வென்று அசத்தினார். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக காதலித்துவரும் சூழலில் திருமணம் எப்போது என்பது குறித்து அருண் ஓபனாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்தவர் அர்ச்சனா. அதேபோல் தனியார் சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அருண். சீரியல்களில் வில்லியாக நடித்த அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் அந்த சீசனில் அவர் கலந்துகொண்டாலும் தான் வீட்டுக்குள் சென்ற முதல் நாளிலிருந்தே அட்டகாசமான கேமை விளையாடினார். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் போகப்போக பிக்கப் செய்துகொண்டார்.

வைத்து செய்த அர்ச்சனா: வீட்டுக்குள் சென்றதும் சூதுவாதினை புரிந்துகொண்ட அவர்; கொஞ்ச நாட்களிலேயே சக போட்டியாளர்களை வைத்து செய்ய ஆரம்பித்துவிட்டார். முக்கியமாக நிக்சனுக்கும் அவருக்கும் வந்த வாக்குவாதத்தின்போது அர்ச்சனா நடந்துகொண்ட விதம் அந்த சீசனின் ஹைலைட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது கேமை பார்த்த பலரும் கண்டிப்பாக ஏழாவது சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனாதான் என்று ஆரூடம் கூறினார்கள். அதன்படியே அவர் டைட்டில் வின்னராகவும் மாறினார்.
சினிமாக்களில் அர்ச்சனா: பிக்பாஸ் ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரானதால் மேற்கொண்டு தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனார் அவர். அதனையடுத்து அவருக்கு சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்புகளும் பரவலாக கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி அருள்நிதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான டிமான்ட்டி காலனி 2 படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் அவர். அதேபோல் இன்னும் சில படங்கள் அவரது கைவசம் இருப்பதாக கோடம்பாக்க வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
அருணுடன் காதல்: இதற்கிடையே அர்ச்சனா பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து புகழடைந்த அருணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார். அருணும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்துகொண்டார். தன்னால் முடிந்த அளவுக்கு நல்ல கேமை விளையாடிய அவரால் டைட்டில் அடிக்க முடியவில்லை. சூழல் இப்படி இருக்க அர்ச்சனாவும், அருணும் காதலித்துவருவதாக சமீபத்தில் பொது மக்களுக்கு அறிவித்துவிட்டனர். இந்நிலையில் அவர்களது திருமணம் குறித்து தெரியவந்திருக்கிறது.
அருண் பேட்டி: அருண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கும் அர்ச்சனாவுக்கும் விரைவில் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று எங்கள் இருவரது வீட்டிலும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வருடத்துக்குள் எங்களது திருமணத்தை நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்" என்றார். இதனால் அவர்களது திருமணம் விரைவில் நடப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அருணுக்கும், அர்ச்சனாவுக்கும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











