தவறான எண்ணத்தில் தொடவில்லை..மன்னித்து விடுங்கள்..மோசமான மீம்ஸால் மனம் நொந்த அசல் கோலார்!
சென்னை : பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று அசல் கோலார் மனம் நொந்து பேசி உள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததும் குயின்சியிடம் சீண்டல் விளையாட்டுகளை தொடங்கிய அசல் கோலார் அவர் சிக்காததால், நிவாஷினியுடன் ஜோடி சேர்ந்தார்.
தினமும் அவருடைய ஏதாவதொரு சில்மிஷ வீடியோ வெளியாகிக் கொண்டே இருந்தது. இணையத்திலும் அவருடைய ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அசல் கோலார்
அசல் கோலாரின் ஆட்டம் கோளாறாக இருப்பதால், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதையடுத்து, கடந்த வாரம் அசல் கோலாரு எலிமினேஷன் ஆனார். கமல் ஹாசனும் வந்த நோக்கம் நிறைவேறியதா என்று கேட்டு அசல் கோலாரை மறைமுகமாக கிண்டல் அடித்தார்.

மிகவும் கஷ்டப்பட்டேன்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அசல் கோலார், விஜய் டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டிலிருந்து நான் ஏன் வெளியேறினேன் என்று எனக்குத் தெரியவில்லை. வெளியே வந்த பின்பு தான், இணையத்தில் வந்த வீடியோ, மீம்சை பார்த்து கஷ்டப்பட்டேன், ரொம்பவே கஷ்டப்பட்டேன். நான் அந்த மாதிரியான நோக்கத்தில் நடக்கவில்லை வெளியில் இருந்து பார்க்கும் போது மக்களுக்கு அப்படி அது தெரிகிறது.

தவறாக தொடவில்லை
மக்களால் என்ன பார்க்க முடியுமோ அதை வைத்துதான் அவர்கள் முடிவு செய்வார்கள். நான் பெண்களிடம் சென்று பேசுவது, அவர்களை தொடுவது தவறாக பார்க்கப்படுகிறது. நான் என் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு சென்றால், எப்படி நடந்து கொள்வேனோ அப்படித்தான் அங்கும் நடந்து கொண்டேன். மேலும், அங்கு இருப்பவர்களிடம் நான் தவறாக நடந்து கொண்டால், போட்டியாளர்கள் அதை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள்.

மன்னித்து விடுங்கள்
அதுமட்டும் இல்லாமல் நம்மை சுற்றி கேமராக இருக்கும் போது அப்படி ஒரு எண்ணமே தோன்றாது. நான் தெரிந்து பண்ணாத ஒரு விஷயம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது. பிக் பாஸ் ரசிகர்கள் நான் காயப்படுத்தி இருந்தால், தயவு செய்து என்ன மன்னித்துவிடுங்கள். நான் பிறந்ததிலிருந்தே என்னுடைய கேரக்டர் அதுதான். பார்ப்பவர்களுக்கு அப்படி இருப்பது பிடிக்கவில்லை என்றால், அது மாற்றிக் கொள்ளக்கூடிய வேண்டிய விஷயம் என்றால், அதை நான் மாற்றிக் கொள்கிறேன்.


Click it and Unblock the Notifications











