பிக் பாஸ் ஆயிஷாவின் காதலன் இவரா?ஆனால்... பிரேக்கப்பாகிவிட்டது..காதலன் பேட்டி!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆயிஷாவின் காதலன் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் வீட்டின் முக்கியமான போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா, ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில், என் கதையை சொல்ல நான் விரும்பவில்லை. அப்படி சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மிகவும் சோகமான முகத்துடன் கேமரா முன் தனியாக பேசினார்.
இதையடுத்து, ஜிபி முத்து மற்றும் ரச்சிதாவிடம் நான் கதை சொல்லும் போது பர்ஸரை அழுத்துமாறு கூறிவிட்டார். இதனால், அவர் கதை பாதியில் நிறுத்தப்பட்டது.

ஒருவரின் கட்டுப்பாட்டில்இருந்தேன்
ஆயிஷா இவ்வாறு சொன்னதாலேயே இவருடைய கதையை தெரிந்து கொள்ள நேயர்கள் ஆசைப்பட்டனர். அதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு நான் டிக் டாக் செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தேன் அவர் சொன்னதை மட்டும் செய்து கொண்டிருந்தேன், இதனால், பலருக்கு என்னை பிடிக்காது என சகபோட்டியாளர்களிடம் வருத்தப்பட்டு கூறியிருந்தார். இதையடுத்து, ஆயிஷா கூறிய அந்த நபர் யார் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்தனர்.

மூன்று வருட காதல்
ஆயிஷா கூறியது அவருடை காதலரான இயக்குநர் தேவ் என்பதை தெரிந்து கொண்டு, அவரை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுத்துள்ளனர். இதில், ஆயிஷா டிக் டாக் செய்து கொண்டிருந்த மூன்று நான்கு வருடங்கள் என்னுடன் தான் இருந்தார். ஆயிஷாவை சீரியலில் அறிமுகப்படுத்தியதே நான்தான் இது பலருக்கும் தெரியும் எங்கள் இரண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.

பிரிந்து விட்டோம்
சத்யா சீரியலில் இவர் விஷ்ணுவுடன் சேர்ந்து நடித்த போது தான் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டோம். கொஞ்ச நாள் மனசு சரியில்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது எல்லாம் சரியாகி விட்டது இப்ப நான் என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஆயிஷா எதற்கு என்னை பற்றி பிக் பாஸ் வீட்டில் பேசினார் என்றார்.

பாராட்டிய கமல்
பிக்பாஸ் வீட்டில் நடிகை ஆயிஷா சிறப்பாகவே விளையாடி வருகிறார். அசீமுன் தன்னை வாடி போடி என தரக்குறைவாக விமர்சித்த போது, அவரை குறித்து அவமரியாதையாக எதுவும் பேசாமல் கடைசி வரை மரியாதையாக பேசுகள் என்று மட்டுமே கூறி வந்தார். இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி கமல்ஹாசனும் பாராட்டி இருந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போவதால், இவரால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. இருப்பினும் இவர் ஒரு வலுவான போட்டியாளராகவே இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











