இவர் தான் என் காதலன்.. மிகவும் சந்தோஷமான நாள்.. காதலனுடன் இரவு டேட்டிங் சென்ற ஆயிஷா!
சென்னை : காதலர் தினத்தில் காதலனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் நடிகை ஆயிஷா.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் நடித்து அனைவருக்கு பிடித்த நடிகை ஆனார்.
அந்த சீரியலில் பாய்ஸ் ஹேர் கட்டுடன், ஜூன் ஷர்ட் அணிந்து ரௌடி பேபியாக வலம் வந்தார். இந்த சீரியலில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகை ஆயிஷா
சத்யா கிடைத்த வரவேற்பால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிஷா சிறப்பாக விளையாடினார். வந்த முதல் வாரத்திலேயே ரெங்கிங் டாஸ்கின் போது, அசீம் வாடி, போடி என்று பேசியதால், ஆத்திரம் அடைந்த ஆயிஷா, ஒரு கட்டத்தில், பொறுமை இழந்த ஆயிஷா, செருப்பை கழட்டி அசீம் மீது வீசினார். பின் இந்த பஞ்சாயத்தை கமல்ஹாசன் தீர்த்துவைத்தார்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தடுமாறிய ஆயிஷா அதன்பின் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடினார். இருந்தாலும், 8 வது வாரத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் ஆயிஷாவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் 12.50 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

காதல் சர்ச்சை
ஆயிஷா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, முன்னாள் காதலன் இவரை பற்றி தரக்குறைவாக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், ஆயிஷா கழுத்தில் இருக்கும் செயின் குறித்து பல விஷயங்களை பொதுவெளியில் பேசினார். இது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமில்லாமல், சத்யா தொடரில் இணைந்து நடித்த விஷ்ணுவை காதலிப்பதாகவும் கிசுகிசு எழுந்தது.

காதலனை அறிமுகப்படுத்திய ஆயிஷா
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே, காதலன் பற்றி பேசிய ஆயிஷா, கடந்த சில நாட்களுக்கு முன் காதலன் முகத்தை மறைத்தபடி கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். ஆயிஷாவின் காதலன் யாராக இருக்கும் என்று அனைவரும் கேட்டு வந்த நிலையில், காதலர் தினமான நேற்று, தனது காதலன் லோகேஷை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

காதலருடன் டேட்டிங்
காதலனுடன் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு, இது தனக்கு மிகவும் சந்தோஷமான காதலர் தினம் என பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல், தனது காதலருடன் நேற்று இரவு டேட்டிங் சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். காதலனை அறிமுகப்படுத்திய ஆயிஷாவுக்கு பலரும் வாழ்த்து வருவது மட்டுமில்லாமல், எப்போது கல்யாணம் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











