Bigg Boss Azeem: நீ பற்ற வைத்த நெருப்பொன்று... பிக் பாஸ் விக்ரமனை சைலண்டாக அட்டாக் செய்த அசீம்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6ல் முதல் ரன்னர்-அப்பாக தேர்வானவர் விக்ரமன்.
டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன், அசீமிடம் தோல்வியைச் சந்தித்தார்.
இந்நிலையில், விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கிருபா முனியசாமி என்பவர் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமின் இன்ஸ்டா ஸ்டோரி விக்ரமனை அட்டாக் செய்வதாக அமைந்துள்ளது.

பிக் பாஸ் விக்ரமனை அட்டாக் செய்த அசீம்:விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தொலைக்காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் 7வது சீசன் தொடங்கவுள்ளது. பிக் பாஸ் 6வது சீசன் மூலம் விக்ரமன், அசீம், ஷிவின், தனலட்சுமி, ஏடிகே உள்ளிட்ட பலர் ரொம்பவே பிரபலமாகினர்.
இவர்களில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே பிக் பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் ஏறினர். இதில் விக்ரமனுக்கு தான் அதிகம் வெற்றி வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசீம் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றார். பிக் பாஸ் வீட்டில் இருவரும் ஒரே பெட்மேட்டாக இருந்தாலும், போட்டிகளில் பயங்கரமாக மோதிக் கொண்டனர். முக்கியமாக பெண்களுக்கு ஆதரவாக பேசும் விக்ரம், அடிக்கடி அசீமின் திமிர், கோபத்துக்கு கடிவாளம் போட்டுக்கொண்டே இருந்தார்.
அதேபோல், விக்ரமனை பார்த்தாலே டென்ஷனாகும் அசீம், அவரை பலமுறை ஒருமையில் பேசியதோடு, "நீ யார் என்னலாம் கேள்விக் கேட்க" என்று மிக காட்டமாக சண்டையும் போட்டுள்ளார். விக்ரமன், ஷிவின், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா ஆகியோர் ஒரு அணியாகவும், அசீம், மணிகண்டன், தனலட்சுமி, மைனா நந்தினி, ஜனனி உள்ளிட்டோர் இன்னொரு அணியாகவும் மோதிக் கொண்டனர்.
அசீம் என்ன தப்பு செய்தாலும் அவரை தட்டிக் கேட்கும் முதல் ஆளாக விக்ரமன் இருந்துள்ளார். அதேபோல், எவிக்ஷன் கார்டு கொடுப்பதிலும் இருவரும் எதிரெதிர் நின்று சண்டைப் போட்டுள்ளனர். விக்ரமன் அசீம் இருவரும் அடிக்கடி கடுமையாக மோதிக்கொண்டாலும், பல நேரங்களில் நட்புடனும் பழகி வந்தனர். இதனால் இருவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற பெண் குற்றம்சாட்டியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனனை ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், விக்ரமனுக்கு பணம் கொடுத்து உதவியது, ஐ லவ் யூ சொன்னது உட்பட பல ஆதாரங்களை வெளியிட்டார். இதனையடுத்து விக்ரமனும் தன் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தி வருகிறார்.
அதில், தான் கிருபா முனுசாமியிடம் பணம் வாங்கியது உண்மை தான் எனவும், ஆனால் அதனை திருப்பிக் கொடுத்துவிட்ட ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது காதலை ஏற்றுக்கொள்ளாததால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் விக்ரமன் ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் இதுதான் சரியான நேரம் என விக்ரமனை சைலண்டாக அட்டாக் செய்துள்ளார் அசீம்.

பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு அதிக சப்போர்ட் இருந்ததால் பலமுறை மொக்கை வாங்கியுள்ளார் அசீம். அதற்கெல்லாம் சேர்த்து வைத்து தற்போது இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்து விக்ரமனை கலாய்த்துள்ளார். அதில், தான் கை தட்டும் ஒரு போட்டோவை ஷேர் செய்து, கபாலி படத்தின் "நெருப்புடா நெருங்குடா" என்ற பாடலை பின்னணியாக வைத்துள்ளார்.
மேலும், "நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்" என கேப்ஷன் கொடுத்துள்ளார். இறுதியாக "என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும்" என விக்ரமனை மறைமுகமாக தாக்கியுள்ளார் அசீம். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











