நம்ப வச்சு ஏமாத்திட்டாரு.. 1.5 வருஷம் வேஷ்டாகிடுச்சு.. ரவீந்தர் முகத்திரையை கிழித்த பிக் பாஸ் பாலா!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக செல்லும் நபர்கள் எல்லாம் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர்களாகவே இருப்பது தற்செயலாக அமைகிறதா? அல்லது பிக் பாஸ் வீட்டிற்கு சர்ச்சை போட்டியாளர்களை மட்டுமே காசு கொடுத்து கூப்பிடுகிறார்களா என்கிற கேள்வியை தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரவீந்தர் மற்றும் விவாகரத்து பிரச்சனையில் சிக்கிய அர்ணவ், கவுண்டம்பாளையம் படத்தை எடுத்து சர்ச்சையை கிளப்பிய ரஞ்சித் உள்ளிட்ட போட்டியாளர்களை தேடிப் பிடித்து இந்த சீசனில் போட்டியாளர்களாக மாற்றியுள்ளனர்.

bigg boss tamil 8 balaji murugadoss ravindar chandrasekar


பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்துக் கொண்டு பாரதி கண்ணம்மா அருணை ரவீந்தர் ஏமாற்றி வருகிறார் என்றும் என்னை வைத்து படம் பண்ணுகிறேன் என சொல்லி 1.5 வருடத்தை வீணடித்து விட்டார் ரவீந்தர் என்றும் பாலா குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்தர் ஏமாத்திட்டாரு:
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை வைத்துக் கொண்டு ரவீந்தர் சொன்ன கதை தன்னை வைத்து அவர் படமெடுக்கப் போவதாக அறிவித்த மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் படத்தின் கதை. நீங்க என்னோட 1.5 வருடத்தை வேஸ்ட் பண்ணீட்டீங்க. இப்போ போட்டியாளர்களை உங்கள் அடிமைகளாக மாற்ற இப்படி உருட்டலாமா என பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் ட்வீட் போட்டும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கேள்வி எழுப்பி ரவீந்தர் முகத்திரையை கிழித்துள்ளார்.

அட்வான்ஸ் கொடுத்துட்டு எஸ்கேப்: அந்த படத்தில் நடிக்க எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார் ரவீந்தர். ஆனால், அதன் பின்னர், அவரை ஆளே காணோம். என்னை பொறுமையாக வெயிட் பண்ண சொல்லி ஒன்றரை வருடத்தை வீணாக்கினார். அதனால் தான் பிக் பாஸ் முடித்து விட்டு நான் ஹீரோவாக நடிக்க தாமதம் ஆனது. போன் பண்ணாலும் எடுக்கவில்லை, அலுவலகத்துக்கு சென்றாலும் ஆளை காணோம். ஆனால், இப்போ பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்துக் கொண்டு தான் ஒரு பெரிய தயாரிப்பாளர் என்றும் தன்னிடம் இந்த கதை உள்ளது என்றும் சொல்லி அருணை பிரைன் வாஷ் செய்து வருவது அவரது போலித்தனத்தையே காட்டுகிறது. என்னை போல வேறு யாரும் ஏமாந்து விட வேண்டாம் பாய்ஸ் என்றும் பாலா எச்சரித்துள்ளார்.

bigg boss tamil 8 balaji murugadoss ravindar chandrasekar

ரவீந்தருக்கு சிக்கல்: பிக் பாஸ் 4வது சீசன் ரன்னர் அப் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ் ரவீந்தர் தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் அவர் ஒரு மோசடி பேர்வழி என்றும் வெளிப்படையாக சொல்லி உள்ள நிலையில், ரவீந்தருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைந்து விடும் என்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரவீந்தர் வெளியே அனுப்பப்பட்டால் பாலாவுக்கும் ரவீந்தருக்கும் வெளியே பிராங்க் சண்டை இல்லாமல் ரியல் சண்டையே வெடிக்கும் என்பது உறுதி என்கின்றனர்.

மகாலட்சுமி பதில் சொல்வாரா?: ரவீந்தர் தன்னை ஏமாற்றிவிட்டார் என பாலாஜி முருகதாஸ் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமி பாலாவின் கருத்துக்கு பதில் சொல்வாரா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அல்லது தனது கணவரின் தயாரிப்பு விஷயங்களில் அவர் தலையிடாமல் அமைதி காக்கப் போகிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X