சினிமா ரொம்ப கஷ்டம்.. என்னால முடியல.. சினிமாவை விட்டு விலகுகிறேன்.. பாலாஜி முருகதாஸ் திடீர் முடிவு!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான பாலாஜி முருகதாஸ் ஃபயர் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் சினிமாவை விட்டு விலகுவதாக பதிவு ஒன்றை போட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ஃபயர். இதில் பாலாஜி முருகதாஸ், ரக்‌ஷிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜே.எஸ். கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டிகே இசை அமைத்துள்ளார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு பணிகளை செய்துள்ளார்.

Bigg boss Balaji Murugadoss Fire

ஃபயர் திரைப்படம்: இத்திரைப்படம் நான்கு பெண்களைப் பற்றிய கதை என்றும், பெண் குழந்தைகளை ஆசையாக வளர்க்கிறோம். ஆனால், அவர்களைப் பாதுகாப்பாக வளர்க்கிறோமா என்பது கேள்விகுறிதான். அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. விழிப்புணர்வு படமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டதாக ஜே. சதீஷ்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.

சினிமாவை விட்டு விலகுகிறேன்: இந்த திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ அண்மையில் வெளியானது. இதில், படுக்கையறை காட்சி, ஜிம் ஒர்க் அவுட் காட்சி, கிளாமர் காட்சி என அனைத்திலும் பாலாஜி முருகதாஸ் செமயாக நடித்திருந்தார். த்ரில்லிங் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த பாலாஜி முருகதாஜ், தனது எக்ஸ் தள பக்கத்தில், ஜே.எஸ். கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள ஃபயர் படத்தில் நடித்ததற்கு இதுவரை ஒரு சிங்கிள் பேமெண்ட் கூட தரவில்லை. இதனால், நான் சினிமாவைவிட்டு விலகிறேன். I'm out of cinema...i gave up என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள், இந்த முடிவை எடுக்காதீர்கள் என்றும், உன்னால் முடியும், உறுதியாக இருங்கள், உங்களால் இந்த வலியை கடக்க முடியும், மன உறுதியுடன் இருங்கள் என்ற அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Bigg boss Balaji Murugadoss Fire

திடீர் திருமணம்: மாடலான பாலாஜி முருகதாஸுக்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஒரு சில படத்தில் நடித்து வரும் இவர், கடந்த ஏப்ரல் மாதம், மணமேடையில் பட்டு வேஷ்டி - சட்டையில் மணமகளுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திருமணமாகிவிட்டதாக அதிர்ச்சியை கொடுத்து கடைசியில் ஏப்ரல் ஃபூல் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X