10 வருஷ போராட்டம்.. பணத்தை நம்பி கொடுத்தேன் ஏமாத்திட்டாங்க.. பிக்பாஸ் பாலாஜி வேதனை!
சென்னை: பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக களமிறங்கியவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் ஆரியுடன் ஏற்பட்ட சண்டை, சனம் ஷெட்டி குறித்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

மேலும், ஷிவானியுடனான காதல் உள்ளிட்டவற்றால் பெரும் பரபரப்பை கிளப்பினார்.
பிக் பாஸ் பாலாஜி: என்னத்தான் பாலாஜி முருகதாஸ் மேல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், தன்னுடைய ஹேன்சம் லுக்கால் ஏராளமான பெண் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்தியிருந்தார். ஏராளமான பெண்களின் ஆதரவால் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்து 2வது இடத்தை பிடித்தார். அதனைத்தொடர்ந்து ஓடிடியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அந்த சீசனில் வெற்றியாளரானார்.
இசைவெளியீட்டு விழா: வா வரலாம் வா படத்தில் ஹீரோவாக நடிக்கும் பாலாஜி முருகதாஸ் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசினார். அதில், மிஸ்டர் இந்தியா பிலிப்பைன்ஸ், மிஸ்டர் இந்தியா இன் கோவா, பெஸ்ட் மாடல் சவுத் இந்தியாவாக வந்து இருக்கிறேன். வா வரலாம் வா படத்தில் கதாநாயகனாக நடிக்க கிட்டத்தட்ட 10 வருடம் போராடி இருக்கிறேன். இந்த படத்தில் ஹீரோவா நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி.

கசப்பான அனுபவம்: அதில், தன் வாழ்க்கையில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி முருகதாஸ், காசு கொடுத்து நடிக்க கூடாது. அதேபோல காசு வாங்காமல் வேலை செய்யக் கூடாது என்ற குறிக்கோள் கொண்டவன் தான். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, என்னுடைய நண்பர் பிரசாந்த் என்பவர் சௌந்தர் என்று ஒரு இயக்குனர் இருக்கிறார் என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

பணத்தை நம்பி கொடுத்தேன்: அந்த இயக்குநர் ஒரு தயாரிப்பாளரை எனக்கு தெரியும், அவர், ஷார்ட் ஃபிலிம் எடுத்துக் காட்டினால் அவர் படவாய்ப்பு தருவாராம் என்று கூறினார். இதை நம்பி, கல்லூரிக்கு பீஸ் கட்ட வைத்திருந்த பணத்தை அவர்களிடம் கொடுத்தேன். அடுத்த நாள் அந்த நண்பரும் இல்லை, அந்த இயக்குனரும் இல்லை. இவ்வாறு இரண்டு பேரும் பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால், கல்லூரியில் பணம் கட்ட முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











