தமிழ்நாடு உங்க சொத்தா?.. விஜய் கட்சியில் இணையப் போறேன்.. பிக் பாஸ் பாலா அதிரடி முடிவு!

சென்னை: திமுகவில் நிலவும் வாரிசு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை என்றும் தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகவும் பிக் பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தற்போது அதிரடியான ட்வீட் ஒன்றை பதிவிட்டு தனது உறுதியான கருத்தை முன் வைத்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என வரிசையாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படங்கள் உருவாகி வருகின்றன.

Balaji Murugadoss Vijay Udhayanidhi Stalin

ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை சொல்கிறோம் என வரும் இயக்குநர்கள் வாரிசு நடிகர்களை வைத்து படங்களை இயக்குவது தான் வேடிக்கையான ஒன்று என பாலாஜி முருகதாஸ் நேற்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு பின்னர் டெலிட் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது இப்படியொரு ட்வீட்டை போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பிக் பாஸ் பாலா: விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அவுட் ஆஃப் தி பாக்ஸ் கேம் விளையாடி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய பாலா ரன்னர் அப் ஆனார். வனிதா விஜயகுமார், ஜூலி, அபிராமி உள்ளிட்ட முன்னாள் போட்டியாளர்கள் பங்கேற்ற ஓடிடி பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னராக தேர்வானார் பாலா.

Balaji Murugadoss Vijay Udhayanidhi Stalin

வாரிசு அரசியல்: ஒதுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்களின் படங்களை வாரிசு நடிகர்களை வைத்து இயக்குநர்கள் சமீப காலமாக எடுத்து வருவது தான் வேடிக்கையான விஷயம் என நேற்று பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். எந்த இயக்குநரை சொல்கிறார் பாலா என்றும் எந்த நடிகரை குறிப்பிடுகிறார் என்கிற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், அதுதொடர்பாக மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

விஜய் கட்சியில் இணையப் போறேன்: திமுக காலம் காலமாக வாரிசு அரசியல் செய்து வருவது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் திமுகவை முழுவதுமாக எதிர்க்கிறேன். தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறேன் என பாலாஜி முருகதாஸ் தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

Balaji Murugadoss Vijay Udhayanidhi Stalin

தமிழ்நாடு உங்க சொத்தா: மேலும், என்னுடைய தாத்தா, பாட்டி எல்லாம் உங்க கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டாங்க, தமிழ்நாடு என்ன உங்க சொத்தா? காலம் காலமாக உங்க வாரிசுகளே ஆட்சி செய்ய வேண்டுமா? திமுக சீக்கிரமே தோல்வியை சந்திக்கும். அதற்கு காரணமாக நான் இருப்பேன் என பாலா காட்டமாக பதிவிட்டுள்ளார். அவருக்கு அப்படி என்னதான் பிரச்சனை? என்ன நேர்ந்தது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் பாலாவை தவெகவிற்கு வரவேற்று வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X