அதிரடியாக வெளியேற்றப்படுவாரா அக்‌ஷரா? பிக் பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த காரணம் என்ன?

சென்னை: அக்‌ஷராவின் ஹேர் கலரை மாற்ற சொன்ன போதே அவர் முகம் மாறிவிட்டது.

Recommended Video

Bigg Boss நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுகிறார் AKSHARA? | Ciby, Raju

இந்நிலையில், தொடர்ந்து கண்டிப்பான வார்டனான சிபி கொடுக்கும் தண்டனைகள் காரணமாக கடுப்பேறிய அக்‌ஷரா பிக் பாஸ் வீட்டின் பொருட்களை சேதப்படுத்தி பயங்கரமாக கத்தும் புரமோ 2 வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டிலேயே இல்லாத அக்‌ஷரா பிக் பாஸ் ரூல்ஸை மீறியதால் அதிரடியாக வெளியேற்றப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்ட்ரிக்டான சிபி

ஸ்ட்ரிக்டான சிபி

கன காணும் காலங்கள் டாஸ்க் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்ட்ரிக்டான வார்டனாக சிபி மாறி அந்த கதாபாத்திரமாகவே மாறி விட்டார். நேற்றைய எபிசோடில் பிரியங்கா தான் அவருக்கு பயங்கர டார்ச்சர் கொடுத்து வந்தார். இந்நிலையில், இன்று அக்‌ஷரா மற்றும் சிபிக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

டைம் கொடுக்க முடியாது

டைம் கொடுக்க முடியாது

துணியை ட்ரை செய்து விட்டு வருகிறேன் என அக்‌ஷரா கிளம்ப ஓகே சொல்லும் சிபி சீக்கிரமா வாங்க என வார்டன் வேலையை செய்ய அதெல்லாம் நீ சொல்லக் கூடாது. எனக்கு எவ்ளோ டைம் ஆகுமோ நான் எடுத்துப்பேன் என சொல்ல ஆரம்பித்தது சண்டை.

ஆத்திரமடைந்த அக்‌ஷரா

ஆத்திரமடைந்த அக்‌ஷரா

மண்டை மேலயே உட்கார்ந்துட்டு இருப்பீங்களா என அக்‌ஷரா கடுப்பாக உடை மாற்றும் அறையில் இருக்கும் அக்‌ஷராவை சமாதானப்படுத்த வரும் சிபியிடம் நீ பேசாத எங்கிட்ட என எகிறுகிறார். அடுத்ததாக அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும் ராஜு மீதும் எரிந்து விழுகிறார். நேற்று சமத்துப் பெண்ணாக ஹேர் கலர் செய்து கொண்ட அக்‌ஷரா திடீரென இப்படி அடாவடி பண்ண என்ன காரணம், அவருக்கு உண்மையிலேயே என்ன பிரச்சனை நடந்தது என்பதை காண பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சிபியுடன் சண்டை

சிபியுடன் சண்டை

ஏற்கனவே அக்‌ஷராவுக்கும் சிபிக்கும் செண்பகமே டாஸ்க் மற்றும் பொம்மை டாஸ்க்கிலும் பயங்கர சண்டை நடைபெற்றது. எனக்கு சத்தமாக பேச பிடிக்காது என ஆரம்பத்தில் பொய்யாக நடித்த அக்‌ஷரா இப்போ ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார்.

கன்ஃபெஷன் ரூம்

கன்ஃபெஷன் ரூம்

சிபி மற்றும் ராஜுவிடம் கோபமடைந்து பேசிய அக்‌ஷரா பாத்ரூம் ஏரியாவுக்கு வருவதற்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்த எளிதில் உடைக்கக் கூடிய குறைந்த விலை பொருட்களை போட்டு உடைத்து விட்டு தனது கோபத்தை வெளிக்காட்டிய நிலையில், பிக் பாஸ் அவரை கன்ஃபெஷன் ரூமிற்கு வர சொல்கிற புரமோ வைரலாகி வருகிறது.

அதிரடி வெளியேற்றம்

அதிரடி வெளியேற்றம்

பிக் பாஸ் வீட்டு பொருட்களை சேதப்படுத்தக் கூடாது என்றும் விளையாட்டு விதிமுறைகள் மீறி செயல்படக் கூடாது என ரூல் புக்கில் இருக்கும் நிலையில், வரம்பு மீறி அக்‌ஷரா நடந்து கொண்டிருந்தால் அவர் நிச்சயமாக அதிரடியாக இந்த வாரம் வெளியேற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை காண இன்றைய எபிசோடுக்கு ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X