சீரியலில் என்ட்ரியாகும் அனிதா சம்பத்.. எந்த சீரியல்னு தெரியுமா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அனிதா சம்மத் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இதில் பாக்யலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். மாமனார், மாமியார்,கணவர், குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் அனுசரித்து செல்லும் அந்த கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமே பாக்கியா என்று சொல்லலாம் அவ்வளவு அழகாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து வருகிறார். இத்தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் பெஸ்ட் பெர்பாமன்சை கொடுத்து வருகின்றனர்.

Baakiyalakshmi Vijay Anitha

தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில், ராதிகா கர்ப்பம் கலைந்ததற்கு கோபியின் அம்மா ஈஸ்வரி தான் காரணம் என்று கமலா போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்திருந்தார்கள். பின் நீதிமன்றத்தில் ராதிகா, கோபி இருவருமே சொன்ன வாக்குமூலம் ஈஸ்வரிக்கு எதிராக இருந்தது. இதனால் ஈஸ்வரி சிறைக்கு செல்வார் என்று கமலா நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், ராதிகாவின் மகள் மயூ, நீதிமன்றத்தில், அம்மா பூ ஜாடி தடிக்கு தான் கீழே விழுந்தார். ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை என்று சொல்லி அவரை காப்பாற்றி விடுகிறாள். இதனை அடுத்து நீதிமன்றமும் ஈஸ்வரியை விடுதலை செய்து விட்டது. ஆனால், அம்மா மீது அபாண்டமாக பழி போட்டதற்காக கோபி, ராதிகா மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

Baakiyalakshmi Vijay Anitha

அனிதா சம்பத்: இப்படி பாக்யலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், இந்த சீரியலில் புது வரவாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனிதா சம்பத் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த தகவலை அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதா பல திரைப்படத்தில் நடித்துள்ளார். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Baakiyalakshmi Vijay Anitha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X