twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகத் கொலை வழக்கு..திடுக்கிடும் திருப்பம்..முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு?

    |

    மும்பை: கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிக் பாஸ் பிரபலமும், பாஜக பெண் பிரமுகருமான சோனாலி போகத் கொலை செய்யப்பட்டதாக கைதான குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

    Recommended Video

    பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா சோனாலி?

    சோனாலி போகத் மரணம் அடைந்த நிலையில் அவர் மரணத்தின் மர்மம் இன்னும் நீடிக்கிறது. அரியானா முன்னாள் அமைச்சருக்கும் சம்பந்தம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைதான இரண்டு குற்றவாளிகளும் அவர் அருந்திய பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களின் பின்புலம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

    சோனாலி போகத் உடலில் ஏகப்பட்ட காயங்கள்.. இது கொலை தான் என வந்த பிரேத பரிசோதனை அறிக்கை.. இருவர் கைது சோனாலி போகத் உடலில் ஏகப்பட்ட காயங்கள்.. இது கொலை தான் என வந்த பிரேத பரிசோதனை அறிக்கை.. இருவர் கைது

    பிக்பாஸ் பிரபலம், பாஜக பிரமுகர்

    பிக்பாஸ் பிரபலம், பாஜக பிரமுகர்

    பிக்பாஸ், டிக்டாக் பிரபலமும் அரியானா மாநில பாஜக பெண் பிரமுகருமான சோனாலி போகத் கோவாவில் படபிடிப்புக்காக வந்த இடத்தில் திடீரென மரணமடைந்தார். அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் என கடந்த திங்கட்கிழமை சோனாலி போகத்தை செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு அவருடன் வந்தவர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தபர். இந்த விவகாரம் பெரிதான நிலையில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சோனாலி

    விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சோனாலி

    கோவா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அவர் உடலில் பல காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவரை கொலை செய்துள்ளார்கள் என சோனாலி போகத்தின் சகோதரர், தாயார் குற்றஞ்சாட்டியிருந்தனர், அதற்கு ஏற்றாற்போல் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்தவுடன் சோனாலி போகத் உடன் கோவாவுக்கு சென்ற சக்வான் மற்றும் வாசியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்த நிலையில் கடைசியாக பார்ட்டி நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை போலீஸார் சேகரித்திருந்தனர். அதில் அவர்கள் சோனாலியை பலவந்தமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

     பல முறை தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சோனாலி

    பல முறை தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சோனாலி

    இதையடுத்து பிடிபட்ட இருவரிடமும் போலீஸார் ந்டத்திய தீவிர விசாரணையில் அவர்கள் தான் சோனாலியை கொன்றதாக ஒப்புக்கொண்டனர். இருவரும் சோனாலிக்கு அவர் அருந்திய பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறப்பதற்கு முன் சோனாலி போகத்தை தாக்கியுள்ளனர் என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என அவரது சகோதரர் கேட்டுள்ளார். தனது உணவில் ஏதோ கலக்கப்பட்டதால் தான் வித்தியாசமாக உணர்வதாக தாயாரிடம் பேசியுள்ளதாக கூறியுள்ளார்.

    முன்னாள் அமைச்சருக்கு கொலையில் தொடர்பு?

    முன்னாள் அமைச்சருக்கு கொலையில் தொடர்பு?

    இந்நிலையில் இருவரத்து ஒப்புதல் வாக்குமூலம் அவரை கொலை செய்தது உறுதியாகியுள்ள நிலையில் மேலும் திடுக்கிட வைக்கும் தகவலாக அவருடன் கோவாவிற்கு வந்த இருவரில் ஒருவர் அரியானா மாநில முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் ஏதோ சதித்திட்டத்துடன் தான் சோனாலி கோவாவிற்கு அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து கோவா மற்றும் அரியானா மாநில போலீஸார் என இரண்டு மாநில போலீஸாரும் விசாரணையில் குதித்துள்ளனர்.

    அரியானாவில் புயலைக்கிளப்பப்போகும் சோனாலியின் கொலை

    அரியானாவில் புயலைக்கிளப்பப்போகும் சோனாலியின் கொலை

    தற்போது கொலைக்குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை தீவிரமாகும் பட்சத்தில் மேலும் பல மர்மங்கள் விலகலாம் என தெரிகிறது. சோனாலி மரணம் இவர்கள் இருவருடன் முடிய வாய்ப்பில்லை அது அரியானா அரசியலில் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் என தெரிகிறது. மிகப்பெரிய பிரபலம் மரணமடைந்த 2 நாட்களில் கொலையாளிகளை போலீஸார் கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது.

    English summary
    Sonali Phogat's death is still shrouded in mystery. It has been reported that a former minister of Haryana is involved in this murder. This is likely to create a problem in Haryana politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X