Bigg Boss Abhirami: படகு மேல முட்டிப் போட்டு.. கடலை பார்த்து பிக் பாஸ் அபிராமி என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: கலாக்ஷேத்ரா விவகாரத்தில் வாய் விட்டு மாட்டிக் கொண்ட பிக் பாஸ் அபிராமி பீச்சில் படகு மீது ஏறி யோகா செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிராமி வெங்கடாச்சலம்.
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட அபிராமி 56வது நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அஜித் படத்தில் நடித்த அபிராமி: 2018ம் ஆண்டு நோட்டா படத்தில் அறிமுகமான அபிராமி வெங்கடாச்சலம், ஜீ5 ஓடிடியில் வெளியான களவு படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் 2019ல் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தோழியாக நடித்து இருந்தார்.
மாதவனின் ராக்கெட்ரி தி நம்பி விளைவு, சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பிக் பாஸ் பிரபலம்: கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட அபிராமி வெங்கடாச்சலம் அந்த வீட்டில் பாதிக் கிணறை தாண்டிய நிலையில், வெளியேறினார்.

கமல் ஆரம்பித்து அதன் பின்னர் சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 24 மணி நேரமும் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். பிக் பாஸ் போட்டியாளர் நிரூப்பின் முன்னாள் காதலி என்பதையும் அந்த ஷோவில் அவர் ரிவீல் செய்திருந்தார்.
கலாக்ஷேத்ரா விவகாரம்: கலாக்ஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் புகார் கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் மீது புகார் எழுந்த நிலையில், அந்த ஆசிரியர் மற்றும் கலாக்ஷேத்ரா பள்ளிக்கு ஆதரவாக வாய் விட்டு வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார் அபிராமி வெங்கடாச்சலம்.
இந்த விவகாரத்தில் மாணவிகள் மீது தவறு என்று சொல்லவில்லை என்றும் ஆனால், அவர்கள் பலி கடா ஆக்கப்படுகின்றனர் என்றும் விளக்கம் கொடுத்து ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு ஆளானார் அபிராமி.

படகு மீது யோகா: அதன் பிறகு அந்த விவகாரத்தில் அமைதி காக்க ஆரம்பித்த அபிராமி வெங்கடாச்சலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து செல்ஃபி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக பீச்சில் படகு மீது ஏறிக்கொண்டு முட்டிப் போட்டு கடலை பார்த்தபடி யோகா செய்யும் வொர்க்கவுட் போட்டோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் லைக்குகளையும் ஹார்டின்களையும் பதிவிட்டு வருகின்றனர். சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம், நெருஞ்சி, கஜன் மற்றும் மலையாள திரைப்படமான ஆகஸ்ட் 27 உள்ளிட்ட படங்கள் இவரது கைவசம் உள்ளன.


Click it and Unblock the Notifications











