நீங்க வந்த நோக்கம் நிறைவேறிடுச்சுங்களா...அசல் கோலாரை பங்கமாக கலாய்த்த கமல்!

சென்னை : பிக் பாஸ் வீட்டை விட்டு அசல் கோலாரு வெளியேறிய பின்பும் நெட்டிசன்ஸ் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 தற்போது மூன்று வாரங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதில், விஜே மகேஷ்வரி, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், அசீம், ஆயிஷா, ரச்சிதா மகாலட்சுமி, குயின்ஸி, ராம், கதிரவன் உள்ளிட்டோருடன் பாடகர் அசல் கோலாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

முதல் வாரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இவர், பின்னர் படிப்படியாக விளையாட தொடங்கினார். இவர் ஜாலியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தடவல் மன்னன், சில்மிஷ சிகாமணி என பெயர் எடுத்தார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வந்ததுமே ஆயிஷாவை அழவைத்த அசல் கோலார், குயின்சிக்கு ரூட் போட்டார், சிறுத்தை சிக்கும், சிறுவண்டு சிக்காது என்பது போல நைசாக குயின்ஸி கழண்டு கொண்டதால், நிவாஷினியை பக்காவாக ரூட் போட்டு தட்டித்தூக்கினார். தினமும் நிவாஷினியை தடவுவது,கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என ஏதாவது ஒரு சில்மிஷ வீடியோ வெளியாகிக் கொண்டே இருந்தது.

டேஞ்சர் ஜோனில் அசல்

டேஞ்சர் ஜோனில் அசல்

அசல் கோலாரின் வரம்பு மீறிய செயலை கண்டித்து அவரை எலிமினேஷனுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் காத்திருந்தனர். நெட்டிசன்கள் எதிர்பார்த்தது போலவே எலிமினேஷனில் வந்ததால், அசல் கோலாறுக்கு யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. மற்ற போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், டேஞ்சர் ஜோனில் இடம்பெற்றுள்ள மூவரில் ஒருவராக அமர்ந்திருந்தார் அசல்.

வெளியேறிய ஆசிம்

வெளியேறிய ஆசிம்

அப்போது, எதற்கு இந்த இடத்தில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை என கூறினார். இதை கேட்ட பார்வையாளர்கள் கைதட்டி சிரித்தனர். பின்னர் மகேஸ்வரி, அசீம் காப்பாற்றப்பட்ட நிலையில் அசல் எலிமினேஷன் ஆனார். இதையடுத்து, நீங்க வந்த நோக்கம் நிறைவேறிடுச்சுங்களா என கமல் கேட்க, இல்ல சார் பேலன்ஸ் இருக்கு, உள்ளே இருந்து இருந்தால் இன்னும் பண்ணி இருப்பேன், இருந்தாலும் ஹாப்பி தான் சார், இதுவரைக்கும் பண்ணதே ஹாப்பிதான் என்றார்.

புலம்பும் நெட்டிசன்ஸ்

புலம்பும் நெட்டிசன்ஸ்

இந்த வீடியோவை சரியாக எடிட் செய்து, நீங்க வந்த நோக்கம் நிறைவேறிடுச்சுங்களா என கமல் கேட்டதை வைத்து அசலை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அசல் வெளியே போனதை விட, நமக்கு இனிமேல் கண்டெண்ட் கிடைக்காதே என நெட்டிசன்ஸ் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X