கருப்பி கருப்பினு ஒதுக்கினாங்க..கண்கலங்கிய வினுஷா தேவி.. தேற்றிய கமல்!
சென்னை: பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியில் ஆறாவது போட்டியாளராக வந்த வினுஷா தேவி கருப்பி கருப்பி என்று என்னை பலர் ஒதுக்கினார்கள் என்று கண்கலங்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்று.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க பல்வேறு ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய மாற்றம் ஏற்பட்டு வினுஷா தேவி அந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானார். இந்த சீரியல் அண்மையில் முடிவடைந்தது.
பாரதி கண்ணம்மா வினுஷா தேவி: இந்நிலையில், பிக் பாஸ் 7வது சீசனில் 6 வது போட்டியாளராக வினுஷா தேவி நுழைந்துள்ளார். அவரை வரவேற்ற கமல், அவரின் ஏவியை ஒளிபரப்பினார். அதில், நான் குழந்தையாக இருக்கும் போதே அப்பாவை பிரிந்துவிட்டேன். சிறு வயதில் இருந்து அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தேன். அம்மா தனி ஆளாக கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்கள்.
ஒதுக்கினார்கள்: எனக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்தது ஆனால்,என்னை கருப்பு கருப்புஎன்று ஒதுக்கினார்கள். எந்த இடத்திற்கு போனாலும், என் கருப்பு நிறத்தையும், ஒல்லியான உடலையும் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தினார்கள். ஆனால், நான் துவண்டு போகவில்லை தொடர்ந்து போராடினேன் அப்போது தான் பாரதி கண்ணம்மாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் என்னை பலர் கண்ணம்மாவாக பார்த்து இருப்பீர்கள். இந்த பிக் பாஸ் வீட்டில் என்னை வினுஷாவாக பார்ப்பீர்கள் என்றார்.
பரிசு கொடுத்த கமல்: இதையடுத்து,பேசிய கமல், வெளிப்புறம் கருப்பாக இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால், மனம் வெள்ளையாக இருக்க வேண்டும். இந்த நிறம் தான் நம் மண்ணின் நிறம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று, பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவியை பாராட்டும் வகையில் நான்கு கருப்பு வைரத்தை பரிசாக அளித்தார். அரங்கில் இருந்த வினுஷாவின் அம்மா, கண்கள் கலங்கியபடி, என் மகள் என்னை விட தைரியமானவள், அவர் இதே தைரியத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும், அனைவரும் என் மகளை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











