»   »  நீங்க "நானா" ஆயிட்டீங்க.. பிக் பாஸ் வீட்டுக்கு "ஸ்வீட் ஷாக்" கொடுத்த மனைவி!

நீங்க "நானா" ஆயிட்டீங்க.. பிக் பாஸ் வீட்டுக்கு "ஸ்வீட் ஷாக்" கொடுத்த மனைவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த சில மாதங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி மூலம் அதில் கலந்து கொள்பவர்களும் பிரபலம் ஆகின்றனர். நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சிக்கும் வரவேற்பு கிடைக்கிறது.

தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவர் தன்ராஜ். இவர் 'ஜபர்தாஸ்த்' எனும் நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.

நடிகர் தன்ராஜ், 'நான்னா நேனு நா பாய்ஃப்ரெண்ட்ஸ்', 'கோபாலா கோபாலா', 'கப்பார் சிங்' உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்தவர். ஜூனியர் என்.டி.ஆர் நடத்தும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களுள் ஒருவராகக் களம் இறங்கினார்.

காதல் திருமணம் :

காதல் திருமணம் :

ஈ டி.வி-யில் 'ஜபர்தாஸ்த்' எனும் காமெடி நிகழ்ச்சியில் பங்குபெற்றபோது, சிரிஷா என்பவரைக் காதலித்து சில மாதங்களில் திருமணம் செய்துகொண்டார் தன்ராஜ். இவர்களுக்கு 'சுக்ரம்' எனும் மகன் இருக்கிறார்.

மனைவி 7 மாத கர்ப்பிணி :

மனைவி 7 மாத கர்ப்பிணி :

தன்ராஜ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது அவரது மனைவி சிரிஷா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

45 நாட்கள் பிக்பாஸ் வாசம் :

45 நாட்கள் பிக்பாஸ் வாசம் :

45 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வசித்த தன்ராஜ், நேற்று எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்குக் குழந்தை பிறந்த தகவலை ஜுனியர் என்.டி.ஆர், தன்ராஜ் எலிமினேட் ஆனதும் கூறியுள்ளார்.

'பிக் பாஸ்' நெகிழ்ச்சி :

'பிக் பாஸ்' நெகிழ்ச்சி :

மகிழ்ச்சியான விஷயத்தைச் சொன்னதோடு நிகழ்ச்சியிலேயே தன்ராஜை அவரது மனைவியிடம் பேசவைத்தார் ஜூனியர் என்.டி.ஆர். மகிழ்ச்சியாக நலம் விசாரித்த தன்ராஜிடம், அவரது மனைவி 'நான் குழந்தை எல்லோரும் நலம். உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்' எனக் கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

ரசிகர்கள் எதிர்பார்ப்பு :

தன்ராஜ், ரசிகர்களையும், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த அனைவரையும் தனது நகைச்சுவைத் திறனால் மகிழ்ச்சிப்படுத்தினார். அவரது எலிமினேஷன் டி.வி-யின் ரேட்டிங்கைப் பாதிக்கும் எனக் கருதுகிறார்கள். அதனால், அவர் திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்கு வரவழைக்கப்படலாம் எனக் கருதுகிறார்கள் ரசிகர்கள்.

English summary
Telugu Bigg Boss Contestant Dhanraj blessed with a baby boy. Dhanraj acted in many films as a comedian.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil