கைத்தட்ட காசு கொடுக்கும் விஜய் டிவி.. இப்படி பச்சையா ரகசியத்தை ஓப்பன் பண்ணிட்டாரே நிஷா?

சென்னை: விஜய் டிவி பார்க்க தான் பந்தா என்றும், உள்ளே வேலை செய்பவர்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுக்க கூட மாட்டார்கள் என ஏகப்பட்ட புகார்கள் விளையாட்டாகவே அந்த டிவியில் நிகழ்ச்சியில் பங்கு பெறும் பல போட்டியாளர்கள் கூறி உள்ளனர்.

Recommended Video

கொலுத்தி போட்ட பிக் பாஸ்! இந்த வாரம் வெளியேற போவது யார்?

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், காமெடி நிகழ்ச்சிக்கு கூட கைத்தட்ட விஜய் டிவி காசு கொடுக்கும் ரகசியத்தை நிஷா போகிற போக்கில் பட்டென போட்டு உடைத்தார்.

சமூக வலைதளங்களில் நிஷாவின் அந்த வார்த்தைகளை மட்டும் கட் பண்ணி ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

பிரபலங்களின் ஏணி

பிரபலங்களின் ஏணி

சன் டிவி பிரபலங்களை விட விஜய் டிவியில் நிகழ்ச்சி பண்ண ஏகப்பட்ட பேர் சினிமாவில் மிகப்பெரிய இடங்களை பிடித்து உள்ளனர். சாதாரணமாக ஒரு நிகழ்ச்சிக்காக உள்ளே நுழையும் நபர்களை, எல்லா நிகழ்ச்சியிலும் போட்டு, அவர்களுக்கு என தனி ஸ்பேஸ் கொடுத்து, சிவகார்த்திகேயன் போல பிரபலமாக்கி விடும் சினிமா ஏணியாக விஜய் டிவி இருக்கிறது.

சம்பளம் கொடுக்க மாட்டாங்க

சம்பளம் கொடுக்க மாட்டாங்க

விஜய் டிவியில் வேலை செய்பவர்கள் எல்லாம், வீட்டில் நாலு ஆடி கார்களை வைத்திருப்பவர்கள் போல பேசுவார்கள். ஆனால், டிவி ஷோவுக்கு ஓசி பைக்கில் தான் வருவார்கள் என்பது வேறு கதை. விஜய் டிவியில் சரியா சம்பளம் கொடுக்க மாட்டாங்க என ஏகப்பட்ட பிரபலங்கள் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பேசியுள்ளனர். கஸ்தூரி சங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே சம்பளம் சரியா கொடுக்கலை என ட்வீட்டே போட்டு இருந்தார்.

கை தட்ட காசு

கை தட்ட காசு

இந்நிலையில், அறந்தாங்கி நிஷா விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கொண்டே பழைய பட டாஸ்க்கில் விஜய் டிவியையே கலாய்த்து பேசினார். காமெடி என்கிற பேரில், போகிற போக்கில், நான் காமெடி சொன்ன உடனே கை தட்டினார்கள். அதன் பின்னர் தான் தெரிந்தது, கை தட்ட விஜய் டிவி காசு கொடுத்தது என்று என அவர் கூறியதை ரசிகர்கள் ஷேர் செய்து விஜய் டிவியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஆளுக்கு 300 ரூபா

ஆளுக்கு 300 ரூபா

விஜய் டிவி ஷோக்களை பார்க்க அமர்ந்திருக்கும் ஆடியன்ஸ்களும் செட்டப் ஆடியன்ஸ் தான். எப்படி பல அரசியல் மேடைகளில் காசு கொடுத்து ஆட்களை உட்கார வைத்து கைத்தட்ட வைப்பார்களோ? அது போன்று தான் விஜய் டிவி ஷோக்களுக்கு ஆளுக்கு 300 ரூபா கொடுத்து கூட்டிட்டு வருவார்கள் என்கிற பேச்சுக்களும் நிஷாவின் பேச்சுக்கு பிறகு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏகப்பட்ட சேனல்களும் இதே ரூட்டை பின்பற்றுவது தனிக் கதை.

டி.ஆர்.பிக்காக

டி.ஆர்.பிக்காக

சிம்பு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறியது தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஏகப்பட்ட சண்டைகளையும், சர்ச்சைகளையும் அப்படியே ஒளிபரப்பி தனது டி.ஆர்.பி. ரேட்டிங்கையும் எகிற விடுவதில் விஜய் டிவி கில்லாடி தான். பிக் பாஸை ஏன் இன்னும் மற்ற சேனல்கள் காப்பி அடிக்கவில்லை என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X