பாடாய்ப்படுத்தும் அமீர்.. கண்ணீர் விட்டு கதறும் பாவனி.. தப்பிக்க வழியே இல்லையா என கேட்கிறாரே?
சென்னை: அமீரிடம் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா என கண்ணீருடன் நடிகை பாவனி ரெட்டி பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் பாவனி மற்றும் அமீர் நெருக்கமாக பழகியது ரசிகர்களை கடுப்பேற்றியது. பாவனிக்கு விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில் அமீர் முத்தம் எல்லாம் கொடுத்த நிலையில், இருவரையும் கண்டபடி நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக இணைந்து நடனமாடி வருகின்றனர்.

பாவனி அபிநய்
முதல் கணவரை இழந்து தவித்து வந்த பாவனி ரெட்டி இரண்டாவது திருமணமும் தடைபட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட பாவனிக்கும் அமீருக்கும் காதல் இருக்கிறதா? என அபிநய்யிடம் ராஜு ஜெயமோகன் கேட்ட கேள்வி பெரிய சர்ச்சையை கிளப்பியது.

அப்செட்டான அபிநய்
பாவனி பின்னாடி சுற்றித் திரிந்து வந்ததாக நெட்டிசன்கள் மட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் இருந்த சிலரே கூறியதை விட அமீர் வீட்டுக்குள் வைல்டு கார்டாக வந்தது தான் அபிநய்யை ரொம்பவே அப்செட் ஆக்கியது என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தனர். அமீர் வந்ததில் இருந்தே பாவனியை எப்படி கரெக்ட் பண்ணுவது என்கிற நோக்கத்திலேயே தனது கேமை ஆடி கடைசி வரை அந்த வீட்டில் தாக்குப் பிடித்தார்.

ஜோடி ஆகிட்டாங்க
பாவனியும் அமீரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், ஒருவழியாக இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சியில் ஜோடிகளாக மாறிவிட்டனர். பாவனி அமீர் ஹாஷ்டேக்குகளை அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கதறும் பாவனி
இந்நிலையில், தற்போது பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழும் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. நடன ஜோடியான பாவனியின் கால்களை ஸ்ட்ரெட்ச் செய்து அவரது ஜோடியும் நடன ஆசிரியருமான அமீர் கொடுக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் தான் இப்படியொரு வீடியோவை பாவனி ஷேர் செய்துள்ளார்.
ஆளை மாத்தணும்
மேலும், தனது ஜோடி அமீரை மாற்ற ஏதாவது வழி இருக்கா என பாவனி வசூல் ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் "What is the procedure to change this fellow Sirrrrrrr" என கேப்ஷன் கொடுத்து இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வீடியோ ரொம்ப மோசமா இருக்கு என்றும் டெலிட் பண்ணுங்க பாவனி என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிரியங்கா கமெண்ட்
பாவனியின் கால்களை விரித்தபடியும், அவரது முதுகை அமுக்கியபடியும் அமீர் செய்யும் அராஜகத்தை எல்லாம் பார்த்து பதறிப் போன பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 தொகுப்பாளினி பிரியங்கா "தம்பி" என கண்டிக்கும் தொனியில் ட்வீட் போட்டு இருக்கிறார். பாவனி செல்லத்த பாடாய் படுத்தாத அமீர் என பாவனி ஆர்மியினர் பலர் சண்டைக்கே வந்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











