ப்ரமோஷனுக்காக பல லட்சம் செலவு செய்த ராம்..பிக் பாஸ் ஷோவில் இதெல்லாம் இருக்கா..ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோஷனுக்காக ராம் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் அமுதவாணன், அசல் கோலார், ஆயிஷா, அஜீம், தனலக்ஷ்மி, தினேஷ், ஜனனி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டன், நந்தினி, நிவாஷினி, குயின்ஸி, ரச்சிதா, ராம், ராபர்ட், ஷெரினா, சிவின், விக்ரமன், சாந்தி, ஜி.பி. முத்து என 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி. முத்து, சாந்தி ஆகிய 2 பேரும் வெளியேறி உள்ளனர். இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிரபலமானவர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அனைவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் ஆர்வமாக உள்ளார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, ஓவியா, ரைசா, யாஷிகா, தர்ஷன், கவின், ஐஸ்வர்யா தத்தா, லாஸ்லியா, ஹரிஷ் கல்யாண், ஆரவ், முகின் ராவ் என அனைவரும் இன்று சினிமாவில் ஜொலித்துக்கொண்டு இருக்கின்றனர்.

ப்ரோமோஷனுக்காக பணம்
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனால் தான், வெளியில் வந்ததும் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு வரும் பலரும் லட்சக்கணக்கில் ப்ரோமோஷனுக்காக செலவு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ராம், தான் ப்ரமோஷனுக்காக ரூ.2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

இதற்கு முந்தைய சீசனிலும்
அந்த வீடியோவில், ஒரு டீமிடம் விளம்பரத்திற்கு பணம் கொடுத்துவிட்டு வந்து இருக்கிறேன். அவங்க பண்ணிடுவாங்க, இதற்கு முன்னாடியும் அவங்க இப்படி ப்ரோமோஷன் பண்ணி இருக்காங்க. சோ...இது ஒன்னும் புதுசு இல்லை என்றார். உடனே குறுக்கிட்ட குயின்ஸி 2.5 லட்சம் ரொம்ப அதிகம், நீ வெளியில் போனதும் என்ன என்று பாரு என்று சொல்ல. ஆமாம், அப்படித்தான் பேசியிருக்கிறேன், பண்ணுங்க வந்து பேசிக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன். வெளியில் போனால் தான் என்ன நடந்து இருக்கும் என்று தெரியும் என்றார்.

இதெல்லாம் நடக்குதா?
அப்போது அருகில் இருந்த நிவாஷினி, 2.50என்பது நார்மல் தான் பொதுவா ப்ரோமோஷனுக்கு அவ்வளவுதான் வாங்குகிறார்கள் என்றார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். திடீர் திடீரென சிலரின் போட்டியாளர்கள் பெயர் டிரெண்டாக இதுதான் காரணமா என்றும்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதெல்லாம் கூட நடக்குதா என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











