துணிவு ‘சில்லா சில்லா’ பாடலில் பிக் பாஸ் பிரபலங்கள்.. அமீர், பாவனி, சிபிக்கு அடித்தது ஜாக்பாட்!

சென்னை: அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' பாடலில் பிக் பாஸ் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல பிரபலங்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

ஆரவ், ரைசா வில்சன், தர்ஷன், முகேன் ராவ், லாஸ்லியா, கவின், ஷிவானி நாராயணன் என பலர் சினிமாவில் நடித்து வரும் நிலையில், பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு துணிவு படத்தில் நடிக்கும் செம தூளான வாய்ப்பே கிடைத்துள்ளது.

பிக் பாஸ் டு சினிமா

பிக் பாஸ் டு சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதே சினிமாவில் பெரிய நடிகராக வலம் வர வேண்டும் என்கிற ஆசையோடு தான் பல போட்டியாளர்கள் அந்த மேடையை பயன்படுத்தி வருகின்றனர். ஆரவ், ரைசா வில்சன், தர்ஷன், முகேன் ராவ், லாஸ்லியா, கவின், ஷிவானி நாராயணன் என பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு அப்கிரேட் ஆகி உள்ளனர். சில பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் ஹரிஷ் கல்யாண், ஓவியா, ஆரி அர்ஜுன் போல மீண்டும் சினிமாவில் கெத்து காட்டுவார்கள்.

வாரிசு படத்திலும்

வாரிசு படத்திலும்

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கமலின் விக்ரம் படத்தில் அறிமுகமாகி இன்று வெளியான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் வரை பல படங்களில் நடித்து வருகிறார். அதே சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், துணிவு படத்திலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அமீர், பாவனி, சிபி

அமீர், பாவனி, சிபி

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான ராஜு ஜெயமோகன் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த சீசனில் பங்கேற்ற அமீர், பாவனி மற்றும் சிபி உள்ளிட்ட மூன்று பிக் பாஸ் பிரபலங்கள் அஜித்தின் துணிவு படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் அஜித்துடன் தாய்லாந்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்களும் டிரெண்டாகின.

சில்லா சில்லா பாடலிலும்

சில்லா சில்லா பாடலிலும்

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள சில்லா சில்லா பாடலில் அஜித், மஞ்சு வாரியர் உடன் அமீர், பாவனி மற்றும் சிபி நடனமாடும் காட்சிகளும் காரின் மேல் அமர்ந்திருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

பாவனி ஹாப்பி

பாவனி ஹாப்பி

அந்த ஸ்க்ரீன் ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த பிக் பாஸ் பிரபலம் பாவனி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். அமீர் மற்றும் பாவனி அஜித்தின் துணிவு படத்தில் நடித்திருப்பதை அறிந்த அஜித் ரசிகர்கள் பாவனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X