செரீனாவிடம் ஆபாசமாக பேசிய அசீம்...பேரை கெடுக்க சதியா? நடந்தது என்ன?

சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் முக்கியமான போட்டியாளரான அசீம், செரீனாவிடம் ஆபாசமாக பேசியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நாளை இரவு வின்னர் யார்... ரன்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதால், பிக் பாஸ் பிரியர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் 9ந் தேதி 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வீட்டில் அசீம், ஷிவின், விக்ரமன், மைனா என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் வீட்டின் ஆட்ட நாயகனாக அசீம் இருக்கிறார் பல நேரம் அவர் பேசுவதை கேட்கும் எரிச்சலாக இருந்தாலும், இந்த சீசனை போரடிக்காமல் கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு.

வார வாரம் நாமினேட்

வார வாரம் நாமினேட்

எவான இருந்தா என்ன...நான் தனித்து விளையாடுவேன் என்ற முடிவெடுத்து விளையாடிய அசீமுக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்த அத்தனை பேரும் எதிராகவே இருந்தனர். அசீமை போட்டியாளர்கள் வார வாரம் நாமினேட் செய்தனர், அதுமட்டுமில்லாமல் கமலும் அசீமை பல முறை கடுமையான வார்த்தையால் கண்டித்தும் உள்ளார்.

ரெட் கார்டு கொடுத்து அனுப்புங்க

ரெட் கார்டு கொடுத்து அனுப்புங்க

யார் என்ன சொன்னாலும் கேட்காத அசீமுக்கு மக்களின் ஆதரவு உள்ளது. அடுத்தடுத்து வந்த விமர்சனங்களை எல்லாம் பிளஸாக மாற்றிய அசீம், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு மேல் இருந்து வெற்றியை எட்டிபிடிக்கும் தருவாயில் உள்ளார். ஆரம்பத்தில் இவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்புங்க என்று சொன்ன பிக் பாஸ் பார்வையாளர்களே அசீமின் ஆதரவாளராக மாறி அவருக்கு வாக்களித்து வருகின்றனர்.

ஆபாசமாக பேசினாரா?

ஆபாசமாக பேசினாரா?

இந்நிலையில், அசீம் செரீனாவிடம் ஆபாசமாக பேசியதாக இணையத்தில் ஒரு தகவல் பரவிவருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக, எவிக்டாகி வெளியேறிய அனைத்துப்போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதில், செரீனாவும் வந்துள்ளார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த அசீம், உன்னுடைய ஆண் நண்பரை பார்க்க செல்லும் போது காண்டம் எடுத்துக்கொண்டு போ, என பேசியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

பெயரை கெடுக்க சதி

பெயரை கெடுக்க சதி

ஆனால், அசீம் இவ்வாறு பேசியதற்கான எந்த ஒரு வீடியோ ஆதாரமும் இல்லை என்பதால் இது முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது. அசீமுக்கு ஆதரவாக பலர் வாக்களித்து வரும் நேரத்தில், அவருடை பேரை கெடுக்க சதி நடப்பதாக கூறப்படுகிறது. அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்கும் கடுமையான போட்டி நடந்து வருவதால், அசீம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இப்படி பொய்யான தகவல் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

பப்ளிக் ஷோல இப்படியா?

பப்ளிக் ஷோல இப்படியா?

இணையத்தில் இந்த தகவல் காட்டுத்தீபோல ஒரு பக்கம் பரவிக்கொண்டு இருக்க ஒரு நெட்டிசன்ஸ், அசீம், செரீனாவிடம் காண்டம் பற்றி பேசவில்லை, சிகரெட் இருக்கானுதான் கேட்டாரு என்றும், என்னதான் இருந்தாலும், ஒரு பப்ளிக் ஷோல ஒரு பொண்ணுகிட்ட சிகரெட் கேட்பது சரியாகப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X