Just In
- 4 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 5 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 8 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 9 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: நிவர் புயல் காரணமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வெள்ளம் வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய நிகழ்ச்சியிலும் அந்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
நல்லவேளை வெளியே ஹோட்டலிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன பண்ணார்கள் என்பதை கேமரா வைத்து காட்டாமல், வெளியே போனதும், வந்ததுமாக காட்சிகளை காட்டி ஓட்டிவிட்டனர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கதவு வழியாக ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வெளியேறிய நிலையில், அப்படியே ஷோவை முடித்து விட்டு, அவங்களை வீட்டுக்கு அனுப்பிடுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
அன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ !

புயல் எச்சரிக்கை
நிவர் புயல் பிக் பாஸ் வீட்டையும் சும்மா விடவில்லை. வீட்டுக்குள்ளே வெள்ளம் வந்து விட்டது, என ஏகபட்ட தகவல்கள், செய்திகள் பரவின. ஆனால், நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிக் பாஸ் போட்டியாளர்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர். அதன் அறிவிப்பை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சொல்லும் காட்சியும் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அலறிய அனிதா
அய்யோ, நமக்கே இப்படின்னா, வீட்ல இருக்கிறவங்க நிலைமை என்ன ஆகும் என அனிதா சம்பத் அந்த அறிவிப்பை தொடர்ந்து அலறினார். பிக் பாஸ் விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும், பாதுகாப்பான இடத்திற்கு போட்டியாளர்கள் செல்ல வேண்டும் என்றும் பிக் பாஸ் பணித்தார்.

பாதுகாப்பு உபகரணங்கள்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் முக ஷீல்டுகளையும் அணிந்து கொண்டு விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் போல, அந்த வீட்டை விட்டு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வெளியேறிய காட்சிகளும், பிக் பாஸ் வீட்டுக்குள் மழை கொட்டிக் கொட்டிருந்த காட்சிகளையும் காண்பித்தனர்.

வீடுகளுக்கு தகவல்
பிக் பாஸ் குழு போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும், போட்டியாளர்களின் குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்யும் என்றும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு உத்தரவாதம் கொடுத்து, அவர்களின் பயத்தை வெகுவாக போக்கினார். ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனரா? அல்லது விஐபி அறையில் தங்க வைக்கப்பட்டார்களா என்பது குறித்து விளக்கவில்லை.

மீண்டும் வீட்டுக்குள்
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போதே, பக்கா சேஃப்டியுடன் செல்வது போல சீன் போட்டு கிளம்பிய போட்டியாளர்கள் மறு நாள் காலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததை போல நல்லாவே டிராமா பண்ணார்கள் என்றும், அவ்வளவு சீக்கிரமாக வர வாய்ப்பில்லை என்றும், அவை முன்கூட்டியே எடுத்த காட்சிகள் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பறிமாறி வருகின்றனர். எப்படி இருந்தாலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் சேஃப், நாளைக்கு கமல் வருவது நிச்சயம்.

அப்படியே அனுப்பிடுங்க
மேலும், சில நெட்டிசன்கள், அப்படியே ஒட்டுமொத்தமா அத்தனை போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்பிடுங்க, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் எண்ட் கார்டு போட்டுடுங்கன்னு 54வது நாளிலேயே அழுத்துக் கொண்டு சொல்கின்றனர். இன்னும் உங்களை பாதி நாட்கள் வச்சு செய்ய வேண்டாமா?