சும்மா கிழிக்கு கெட்ட ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. நடுவே பிக் பாஸ் சொன்ன செம ஹேப்பி நியூஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அட்டகாசமாக துவங்கி உள்ளது. இரண்டாம் நாளை தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலுடன் வரவேற்றனர்.

Recommended Video

வாத்தி கம்மிங் | Bigg Boss Tamil Promo • Kamal Hassan

கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த 4வது சீசனிலும் போட்டியாளர்கள் செம டான்ஸ் ஆடி காலை பொழுதை அழகாக துவங்குகின்றனர்.

அதிலும், ரம்யா பாண்டியன், ஷிவானி, கேப்ரில்லா, அனிதா பாண்டியன், சம்யுக்தா, சனம் ஷெட்டி என இளம் பெண்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசிக்கின்றனர்.

வாத்தி கம்மிங்

வாத்தி கம்மிங்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ஓபனிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் கையில் பூச்செடி ஏந்தி உள்ளே சென்றனர். இரவு நேரம் தூங்கி எழுந்து, முதல் நாள் விடிந்தவுடன் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டனர்.

குட்டி உடை அணிந்து

குட்டி உடை அணிந்து

சீரியல் நடிகை ஷிவானி, குட்டி டவுசர் போட்டுக் கொண்டு நடனம் ஆடியதையும், கேப்ரில்லா நைட் டிரெஸ் போட்டுக் கொண்டு நடனம் ஆடியதையும் ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர். நீல நிற டாப்ஸ் அணிந்து முதல்வார கேப்டன் ரம்யா பாண்டியன் செம க்யூட்டாக நடனமாடினார்.

அடுத்த ஓவியா

அடுத்த ஓவியா

ஹார்ட் - புரோக்கன் ஹார்ட் டாஸ்க்கின் இறுதி காட்சிகள் இன்றைய இரண்டாம் நாளின் ஆரம்பத்தில் காண்பிக்கப்பட்டன. அதன் பின்னர், ஷிவானிக்கு ஆறுதல் சொல்லும் ஆரியின் அட்வைஸ் சீன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எந்தவொரு கேம் பிளானும் இல்லாமல் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என ஷிவானி சொன்னதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அடுத்த ஓவியா என முடிவு கட்டி விட்டனர்.

சும்மா கிழி

சும்மா கிழி

இரண்டாம் நாள் தொடக்கத்தை போட்டியாளர்கள் அனைவரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் ஒலித்ததும் எழுந்து வந்து செம ஆட்டம் போட்டனர். ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, நிஷா, ரியோ ராஜ், சம்யுக்தா, ஷிவானி, அனிதா சம்பத் எல்லாம் செம டான்ஸ் போட்டனர்.

நோ எவிக்‌ஷன்

நோ எவிக்‌ஷன்

சும்மா கிழி பாடலுக்கு போட்டியாளர்கள் டான்ஸ் ஆடிக் கொண்டே இருக்கும் போது, திடீரென பாடல் நிறுத்தப்பட்டு அதன் நடுவே பிக் பாஸ் வாய்ஸ் ஒலித்தது. அனைத்து போட்டியாளர்களும் ஷாக்காகி பார்த்தனர். புரோக்கன் ஹார்ட் டாஸ்க் காரணமாக, முதல் வாரத்தில் யாருமே எலிமினேஷன் இல்லை என்கிற செம சூப்பரான ஹேப்பி நியூஸை சொல்ல, மறுபடியும் பாடல் ஒலித்தது. முன்பை விட போட்டியாளர்கள் இப்போ வேற லெவல் குஷியில் குத்தாட்டம் போட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X