பிக் பாஸ் ரீயூனியன்னா இப்படி இருக்கணும்.. அபிஷேக், அபிநய், மது, சுருதி சும்மா கலக்குறாங்களே!

சென்னை: சத்தமே இல்லாமல் ஒரு சூப்பர் பிக் பாஸ் ரீயூனியனை அபிஷேக் ராஜா அரங்கேற்றி உள்ளார்.

அபிஷேக் ராஜா, மதுமிதா, சுருதி மற்றும் அபிநய் ஆகிய 4 பேரும் கலக்கலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அபிஷேக் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வர வச்சு செய்த பிக் பாஸ்

வர வச்சு செய்த பிக் பாஸ்

யூடியூப் விமர்சகரான சினிமா பையன் அபிஷேக் ராஜா இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். கன்டென்ட் கிங் என ரசிகர்களால் பாராட்டப்பட்ட அவர் வந்த வேகத்திலேயே இரண்டாவது வாரத்திலேயே எலிமினேட் ஆகி சென்றார். வெளியேறிய அபிஷேக்கை மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக வரவைத்து மறுபடியும் அதிரடியாக எலிமினேட் செய்து பிக் பாஸ் வரவழைத்து நன்றாக வச்சு செய்து விட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

எதிர்பார்க்காத எவிக்‌ஷன்

எதிர்பார்க்காத எவிக்‌ஷன்

கடந்த சீசனில் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க் பண்ணி விளையாடிய பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆன நிலையில், இந்த சீசனில் காயினை திருடி விளையாடிய சுருதி எதிர்பாராதவிதமாக எவிக்ட் செய்யப்பட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியது. சுருதியும் விளையாடாமல் அழுது கொண்டே இருந்திருந்தால் இன்னமும் இருந்திருப்பார் போல!

ஜெர்மனிக்கு கிளம்பலையா

ஜெர்மனிக்கு கிளம்பலையா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவை முடித்து விட்டுத் தான் ஜெர்மனிக்கு மதுமிதா கிளம்புவார் போல தெரிகிறது. சுருதி உடன் சேர்ந்து சுற்றிக் கொண்டு இருந்த மதுமிதா தற்போது பெரிய டீமுடன் ரீயூனியன் சென்றுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அபிநய் ஹாப்பி

அபிநய் ஹாப்பி

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அபிநயின் பெயர் வீட்டுக்குள் பயங்கர டேமேஜ் ஆகி உள்ள நிலையில் அதையெல்லாம் மறந்துவிட்டு தற்போது செம ஹாப்பியாக நண்பர்களுடன் இணைந்து கொண்டு ரீயூனியன் செய்துள்ளது பார்க்கவே அழகாக இருக்கிறது.

ஜீலி டைம்

ஜீலி டைம்

ரெஸ்டரன்ட் ஒன்றில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சிம்மாசனத்தில் மதுமிதா அமர்ந்திருக்க அவருக்கு அருகே சுருதி, அபிநய் மற்றும் அபிஷேக் சூப்பர் போஸ் கொடுத்துள்ள ரீயூனியன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஜீலி டைம் என கேப்ஷன் கொடுத்துள்ள அபிஷேக் மீதமுள்ள கேங்கையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X