விக்ரமன் திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள்.. ரச்சிதா முதல் ஷிவின் வரை.. குவியுது வாழ்த்து!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்று ரன்னர் அப் ஆன விக்ரமன் காதல் விவகாரத்தில் சிக்கி மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது திடீரென தனது திருமணத்தை நேற்று நடத்தி முடித்தார். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "அன்பும் அறனும்" என கேப்ஷன் கொடுத்து மனைவியுடன் இருக்கும் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் ஃபேவரைட் போட்டியாளராக மாறிய விக்ரமன் தான் 6வது சீசனில் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. திருமாவளவன் உள்ளிட்டோர் நேரடியாக மக்களிடம் ஓட்டுக் கேட்க ஆரம்பித்தனர்.

vikraman marriage rachita

ஆனால், கடைசி நேர ட்விஸ்ட்டாக பிக் பாஸ் டைட்டிலை அசீம் தட்டிச் சென்றதை பலரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். ஏகப்பட்ட சர்ச்சைகளில் விக்ரமன் சிக்கிய நிலையில், அசிம் டைட்டிலை வென்றது சரிதான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

vikraman marriage rachita

விக்ரமன் திருமணம்: பிக் பாஸ் 6வது சீசனில் ரன்னர் அப்பான விக்ரமன் நேற்று பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த ப்ரீத்தி கரிகாலன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த திருமணம் நடைபெற்றதாக கூறுகின்றனர். "அன்பும் அறனும்" என திருக்குறளை மேற்கோள்காட்டி விக்ரமன் தனது மனைவியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

vikraman marriage rachita

ரச்சிதா முதல் ஷிவின் வரை: பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற ரச்சிதா மகாலட்சுமி, 2வது ரன்னர் அப்பாக வெளியேறிய ஷிவின் கணேஷ் மற்றும் பிக் பாஸ் சீசன் 5ல் ஆரம்பத்திலேயே வெளியேறிய நமீதா மாரிமுத்து உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் ஒன்றாக இணைந்து பிக் பாஸ் விக்ரமனை வாழ்த்திய புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

vikraman marriage rachita

விக்ரமன் மீது குற்றச்சாட்டு: பிக் பாஸ் வீட்டில் விக்ரமனை பார்த்த பலரும் அடுத்த ஆரி அர்ஜுனன் என்றே விக்ரமனை கொண்டாடி தீர்த்தனர். ஆனால், பிக் பாஸ் முடிந்த பின்னர் அவரது காதலி என்றும் விக்ரமன் தன்னை ஏமாற்றி விட்டார் என கிருபா முனுசாமி எனும் வழக்கறிஞர் கிளப்பிய சர்ச்சை விக்ரமன் பெயரை டோட்டல் டேமேஜ் செய்தது. விக்ரமனுக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. ஆனால், தற்போது அவையெல்லாம் அமைதியான நிலையில், ப்ரீத்தி கரிகாலனை தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார் விக்ரமன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X