பிக் பாஸ் வீட்டை பதம் பார்த்த நிவர் புயல்.. வீட்டுக்கே போயிடுறோம் என அலறிய போட்டியாளர்கள்?

சென்னை: சென்னையையே பதம் பார்த்த நிவர் புயல், பூந்தமல்லி அருகே இருக்கும் பிக் பாஸ் வீட்டை மட்டும் சும்மாவா விட்டு வைக்கும்.

பிக் பாஸ் வீட்டின் கார்டன் ஏரியா பகுதிக்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் வந்து விட்டது என்றும், பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களை சொகுசு ஹோட்டலுக்கு மாற்றி உள்ளனர் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

சில போட்டியாளர்கள், புயலால், குடும்பங்கள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும், வீட்டுக்கே போயிடுறோம் என்றும் அலறி உள்ளனராம்.

பிக் பாஸ் வீட்டுக்குள் மழை நீர்

பிக் பாஸ் வீட்டுக்குள் மழை நீர்

சென்னையில் இருக்கும் ஏகப்பட்ட வீட்டுக்குள் இந்த முறை நிவர் புயலின் ஆக்ரோஷத்தால், மழை நீர் உள்ளே வரத் தொடங்கியது. சென்னை மக்கள் மீண்டும் ஒரு பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு மற்றும் தண்ணீர் தேங்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சொகுசு ஹோட்டலில்

சொகுசு ஹோட்டலில்

பிக் பாஸ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால், அந்த செட் போட்ட வீட்டில் போட்டியாளர்களை தங்க வைப்பது ரிஸ்க் ஆகிவிடும் என நினைத்து, அதிரடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிக் பாஸ் குழுவினர், போட்டியாளர்களை பாதுகாப்பாக அருகே உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அலறிய போட்டியாளர்கள்

அலறிய போட்டியாளர்கள்

நிவர் புயலின் கோரத்தாண்டவத்தை பிக் பாஸ் வீட்டில் இருந்து பார்த்த போட்டியாளர்கள், தங்களின் குடும்பத்தினர் இந்த புயலை எப்படி சமாளிக்கின்றனர் என்ற அச்சத்தால் அலறியுள்ளனர். சிலர், விட்டுடுங்க, நாங்க வீட்டுக்கே போயிடுறோம் என்றும் நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடு

பாதுகாப்பு ஏற்பாடு

பிக் பாஸ் வீட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வரை போட்டியாளர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளதாகவும், எந்தவித அச்சமும் யாரும் கொள்ளத் தேவையில்லை என்றும் போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தைரியம் சொல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

விஐபி அறை

விஐபி அறை

மற்றொரு தகவலாக, பிக் பாஸ் போட்டியாளர்களை இவிபி பிலிம் சிட்டியில் உள்ள விஐபி அறையிலேயே தங்க வைத்துள்ளனர் என்றும், தனியாக எந்த ஒரு சொகுசு ஹோட்டலுக்கும் கொண்டு செல்லவில்லை என்றும், நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன. நிலைமை சீர் ஆன பிறகே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடக்கும் என்றும் தெரிகிறது.

அதுதான் காரணம்

அதுதான் காரணம்

நேற்றைய எபிசோடில் வெளியான புரமோவில் ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே நடந்த சண்டை ஏன் காட்டவில்லை என்று கிளம்பிய பிரச்சனைக்கு இது தான் காரணமாம். அந்த காட்சியை இன்றைய நிகழ்ச்சியாக கட் செய்து பிக் பாஸ் டீம் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி உள்ளனர்.

பழைய சீன்கள்

பழைய சீன்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஓரிரு நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும், இல்லை பழைய சீன்களை வைத்து நிகழ்ச்சியை நகர்த்துவார்கள் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் பரவி வருகிறது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தாலும், நாளைய நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X