நம்பவே முடியலையே… நடியா சாங்கிற்கு இத்தனை குழந்தைகளா… வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளர்களில் ஒருவரான நடியா சாங் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் பழைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இணையத்தில் வெளியாகி உள்ள அந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் பல லைக்குகளை கொடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் இல்லத்தில் இவர் இருப்பதே தெரியவில்லை யாரிடமும் பேசாமல் எப்போதும் நான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் நடியா சாங்.

பிக் பாஸ் சீசன் 5
கடந்த இரண்டு வாரமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசிவருகின்றனர். இதில் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் தான் அனைவரும் அழுது அழுது கதை சொல்கின்றனர். இதனால் இந்த அழுகாச்சி டாக்ஸ் எப்போடா முடியும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்து விட்டனர்.

அம்மா மீது வெறுப்பு
இந்த டாஸ்கில் பேசிய நடியா சாங், எங்க வீட்டில் 3 பெண்கள், என் அம்மா மிகவும் கண்டிப்பானவங்க, ஒரு சின்ன தப்பு செய்தாலும் பயங்கரமா அடிப்பாங்க, நான், என் அக்கா, என் தங்கை அடி தாங்க முடியாமல் பல முறை வீட்டைவிட்டு ஓடி இருக்கிறோம். ஒரு முறை போலீஸ்காரரிடம் அடிவாங்க வைத்தாங்க அம்மா. அதிலிருந்து எனக்கு என் அம்மா மேல வெறுப்பு வந்தது என்றார்.

திருமணம்
ஒரு ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் போது என் கணவர் என்னை பிடித்து இருப்பதாக கூறி அம்மாவிடம் பேசி திருமணம் செய்து கொண்டார். என் வாழ்க்கை அன்றிலிருந்து மாறியது. எனக்கு என் கணவர் முழு சுதந்திரத்தை கொடுத்தார். இவ்வளவு தூரம் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததற்கு அவர் தான் காரணம் என்று கூறி இருந்தார். இதனால் நடியாவின் கணவர் சாங்கை அனைவரும் பாராட்டி இருந்தனர்.

பேமிலி போட்டோ
இந்நிலையில், தற்போது நடியா சாங்கின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடியா தனது கணவர் சாங் மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் இருக்கிறார். நடியா சிங்கிற்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள விஷயம் பலருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











