சுரேஷ் தாத்தா முதல் ஷிவானி வரை.. ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு ஷிஃப்ட் ஆன பிக் பாஸ் பிரபலங்கள்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர்கள் விஜய் டிவியை சுற்றியே வட்ட மிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உஷாராக 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறிய கேபி முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலந்து கொண்டார்.

காதலே காதலே எனும் ஷோவை தொகுத்து வழங்கி ஜீ தமிழுக்கு டாட்டா காட்டிய அர்ச்சனா என அனைவரும் தற்போது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது.

ஒருவழியாக வந்த ஷிவானி

ஒருவழியாக வந்த ஷிவானி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேபி, அர்ச்சனா எல்லாம் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் காட்சி தந்த நிலையில், அழகு சிலை ஷிவானியை எங்கேப்பா ஆளே காணோம் என ரசிகர்கள் ஏங்கி தவித்து வந்தனர். பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டு நடனமாடி கவர்ந்த ஷிவானி, தற்போது ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அனிதா கேபியுடன் சோம்

அனிதா கேபியுடன் சோம்

ஆரி, பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ் உள்ளிட்டவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால், சோமசேகர் கலந்து கொண்டு கலக்கப் போகிறார் என்று மட்டும் உறுதியாகி உள்ளது. கேபி, அனிதா தோள் மீது கை போட்டு செம கூலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அர்ச்சனாவும் ஷிவானியும் விடல

அர்ச்சனாவும் ஷிவானியும் விடல

அனிதாவுக்கும் கேபிக்கும் நடுவே எப்படி தோள் மீது கை போட்டு போஸ் கொடுத்தாரோ சோமசேகர், அதே போல அர்ச்சனாவுக்கும், ஷிவானி நாராயணனுக்கும் நடுவே நின்று கொண்டு அதே போன்ற போஸை கொடுத்துள்ளார் சோம். இனிமே இப்படியே விஜய் டிவியை சுற்றியே இவங்க காலத்தை ஓட்டிடுவாங்க என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரியங்காவுடன் செல்ஃபி

பிரியங்காவுடன் செல்ஃபி

ஸ்டார்ட் மியூசிக்கில் தொகுப்பாளினி பிரியங்காவுடன் சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ச்சனா, ஷிவானி நாராயணன், சோமசேகர், அனிதா சம்பத் மற்றும் கேபி உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் எடுத்துக் கொண்ட குரூப் செல்ஃபி புகைப்படத்தையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

கள்ளி அர்ச்சனா

ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டில் பேசுவது போல மொக்கை ரைமிங் கேமை அனிதா சம்பத், ஷிவானி, சுரேஷ் தாத்தா மற்றும் அர்ச்சனா என பிக் பாஸ் போட்டியாளர்கள் பேசும் அதிரடி புரமோ தற்போது வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. அதிலும், சுரேஷ் தாத்தா அர்ச்சனாவை பார்த்து, செவுத்துல ஒட்டுறது பல்லி.. அந்தம்மா ஒரு பெரிய கள்ளி என சொல்வது வேற லெவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X