For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஷப்பா முடியல.. நானா இருந்தேன்.. நானா இருந்தேன்.. ஒரே பதில்.. கமல் அதை கேட்காமலே இருந்திருக்கலாம்!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்தும் வீட்டில் அப்படியே அத்தனை போட்டியாளர்களும் கூட்டமாக குரூப் எல்லாம் உருவாக்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

  இவங்களும் டபுள் எவிக்‌ஷன் எல்லாம் வைக்காமல், செல்லப்பிள்ளைகள், மிக்சர் தின்னிகளை எல்லாம் அனுப்பாமல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

  இதில், 50 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் பண்ண சாதனைகளை பாலாஜி முதல் ஷிவானி வரை பட்டியல் போட்டு பேசியதை பார்ப்பது எல்லாம் கொடுமையின் உச்சம்.

  பாலாஜி மூடிக்கிட்டு அப்பவே ஜெயிலுக்கு போயிருக்கணும்.. வேற லெவலில் வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்!

  பாலாவுக்கு பனிஷ்மென்ட்

  பாலாவுக்கு பனிஷ்மென்ட்

  மணிக்கூண்டு டாஸ்க்கில் ஒழுங்கா நேரத்தை கணிக்காமல், சோம்பேறித் தனமாக வேக வேகமாக நேரத்தை கணித்து பித்தலாட்டம் ஆடிய பாலாவுக்கு தக்க பனிஷ்மென்ட் கொடுக்கும் விதமாக, 50 நாட்களில் பிக் பாஸ் வீட்டில் என்ன பண்ணேன் என்பதை பேசும் போட்டியாளர்களின் நேரத்தை கணிக்கும் வேலையை கொடுத்தார் கமல். 60 நொடிகள் தான் டைம்.

  லவ் எல்லாம் கிடையாது

  லவ் எல்லாம் கிடையாது

  புரமோவில் பாலா பேசியதை கேட்டே ஏகப்பட்ட ரசிகர்கள் டென்ஷன் ஆனார்கள். நிகழ்ச்சியில், பாலா பேசும் போது, ஆணும் பெண்ணும் ஒண்ணா பழகுனா லவ் இல்லை என்பதை கத்துக் கொடுத்துருக்கேன். எப்படி இருக்கணும் என்றும், எப்படி இருக்கக் கூடாது என்றும் கத்துக் கொடுத்துருக்கேன் என்றார். பாலா பேசும் போது ரியோ அவரது எண்ணும் பணியை செய்தார்.

  நான் என்ன பண்ணேனா

  நான் என்ன பண்ணேனா

  50 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நான் என்ன பண்ணேனா, நான் நானா இருந்தேன். நல்லா டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி ஹவுஸ்மேட்களை என்டர்டைன் பண்ணேன். அப்புறம் நான் என்ன பண்ணேனா என ரொம்பவே இழுத்தார். அப்படியே பாலா மாமாவுக்கு பண்ணி விட்ட ஹெட் மசாஜ், ஊட்டி விட்டது, தினமும் காலையில் எழுப்பியதுன்னு எவ்ளோ இருக்கு அதையெல்லாம் சொல்லம்மா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  டாய்லெட் க்ளீன் பண்ணேன்

  டாய்லெட் க்ளீன் பண்ணேன்

  50 நாட்கள் பிக் பாஸ் வீட்டில என்ன கேம் ஆடுனீங்கன்னு கேட்டா, சம்மந்தமே இல்லாமல், எனக்கு ஹைஜீனிக்கா இருக்கிறது ரொம்ப பிடிக்கும் சார், நான் டாய்லெட் க்ளீன் பண்ணேன், பாத்ரூமை சுத்தமாக பார்த்துக்கிட்டேன் என நமீதா பேசுற மாதிரி பேசிய ரமேஷை பார்த்து, வேற என்னை சொல்ல முடியும், அவ்ளோ தான் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

  அப்ளாஸ் அள்ளிய சோம்

  அப்ளாஸ் அள்ளிய சோம்

  இந்த ஷோவுக்கு வரதுக்கு முன்னாடி நான் யாருன்னு யாருக்குமே தெரியாது. நான் ஒரு பாக்ஸர், என்னாலையும் இவ்ளோ சூப்பரா காமெடி பண்ண முடியும் என ஒவ்வொரு முறையும் தொடர்ந்து பேசும் போது, சார் பாஸ் ஆகுது சார் என சொல்லி, தயங்கி நின்று, தனது திக்குவாய் பிரச்சனையை ஓவர்கம் பண்ணி எப்படி பேசுகிறேன், பழகுகிறேன், ஹவுஸ்மேட்களின் அன்பு குறித்து பேசி, கமலிடம் அப்ளாஸை அள்ளினார்.

  அம்மாவா இருக்கேன்

  அம்மாவா இருக்கேன்

  அர்ச்சனா பேசும் போது, பிடிக்குதோ, பிடிக்கலையோ, இந்த வீட்ல எல்லாருக்கும் சமைச்சி போட்டுக்கிட்டு, ஒரு அம்மாவா இந்த வீட்ல இருக்கேன் சார் என மறுபடியும் தாய் பாசத்தால பிக் பாஸ் போட்டியாளர்களை வளைத்துப் போடும் விதமாகவே அர்ச்சனா பேசியது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை.

  நேர்மையா இருக்கேன்

  நேர்மையா இருக்கேன்

  எல்லா போட்டியாளர்களும் அதிகளவில் நான் நானா இருக்கேன் சார், நான் நானா இருக்கேன் சாருன்னு சொல்லியே, இப்பவும் சேஃப் கேம் ஆடிட்டு போயிட்டாங்க, நீங்க நீங்களா இல்லாமல், வேற ஒருவராக பிளாஸ்டிக் சர்ஜரியா பண்ணிட்டு இருக்க முடியும். ரியோ, நான் நேர்மையாக கேம் விளையாடணும்னு பார்க்கிறேன், அதே மாதிரி நடந்துக்கிறேன் என்றார்.

  வொர்த் இல்லை

  வொர்த் இல்லை

  கமல் வீக்கெண்ட் வந்து கேட்டால், முன்பெல்லாம் உண்மை வெளி வரும் இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் ரொம்பவே ஷார்ப்பா விளையாடுகிறோம் என்கிற பெயரில், போரிங்காவே விளையாடி வராங்க, ஒருத்தர் எதை சொல்றாரோ, அதையே மத்தவங்களும் சொல்லி எஸ்கேப் ஆகும் வித்தையை நல்லாவே கத்து வச்சிருக்காங்க.

  English summary
  Bigg Boss Tamil season 4 contestants playing a very safe game and make audience boring. They spoke about what they did in 50 days in the Bigg Boss house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X