என் வாழ்க்கையில் பல நாள் இருட்டில் இருந்தேன்… ராஜுமோகனின் கதை !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ராஜுமோகன், தான் கடந்து வந்த பாதை குறித்து பேசினார்.
இந்த வாரம் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைப்பெற இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டின் வீட்டின் தலைவரான தாமரை செல்வி, பாவ்னியை தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் உள்ளதால் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

கடந்து வந்த பாதை
கடந்த இரண்டு வாரங்களாக ஒரு கதை சொல்லட்டுமா என்ற டாஸ்கில் ஹவுஸ்மெட்டுகள் கூறிவருகின்றனர். இதில் கதை சொல்லும் விதம் குறித்தும், கதையின் தன்மை குறித்தும் லைக், டிஸ்லைக் மற்றும் ஹாட் கொடுக்கப்படும்.

ராஜுமோகன் கதை
இன்று ராஜுமோகன், நான் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். அதில், குற்றாலம் பக்கத்தில் உள்ள வலசை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பா ஒரு மதத்தைச் சேர்ந்தவர், அம்மா ஒரு மதத்தைச் சேர்ந்தவர். இதனால், எனக்கு பெயர் வைப்பதிலேயே பெரிய பிரச்சினை ஆய்டுச்சு. லட்சுமண குமாருனு ஒரு தரப்பும், இன்னோரு உறவினர் எட்வின்ராஜு என பெயர் வைத்தாங்க பெயர்லேயே பெரிய குழப்பம். இந்த பெயர்ல இருக்குற குழப்பத்தால், எட்வின் ராஜுல இருக்குற ராஜுவையும், லட்சுமணகுமாருல இருக்குற குமாருல இருக்குற 'யூ' வா எடுத்து ராஜுனு வைத்துக்கொண்டேன்.

பாக்யராஜ் பாராட்டினார்
என் அம்மா ரொம்ப கடுமையா இருப்பாங்க அதனால், பெண்கள் கூட பேசாதேனு சொல்லுவாங்க அதனாலயே பெண்கள் கூட பேசுவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறுவயதிலேயே பெண் தோழிகள் அதிகம், விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சேன் 4பெண்களை வைத்த ஆ...ஆனு ஓரு குறும்படம் எடுத்தேன் அந்த படத்தை பார்த்து விட்டு பாக்யராஜ் சார் என்னை பாராட்டினார்.

இருட்டில் இருந்தேன்
இதையடுத்து, பாக்யராஜ் சாருடன் ஒரு வருடம் பயணித்தேன். என் வாழ்க்கையில பல நாள் இருட்டில் இருந்தேன்... இந்த வெளிச்சம் என் முகத்தில் பட நாட்கள் ஆச்சு... ஒரு பெரிய வெளிச்சத்திற்காக காத்திருந்தேன் அது இப்போது என் மீது பட்டுள்ளது. இந்த வெளிச்சம் என்மீது பட்டு... அதன் நிழல் கீழே விழாமல் தங்கி பிடித்துக்கொண்டு இருக்கிறார் என் மனைவி என்று அழகாக பேசினார் ராஜு.


Click it and Unblock the Notifications











