அமுதவாணன் முத்தம் கொடுத்தது யாருக்கு தெரியுமா? புட்டு புட்டு வைத்த ஷிவின்!
சென்னை: பெட்ஷீட்டை போர்த்திக் கொண்டு அமுதவாணன் முத்தம் கொடுத்தார் என்று ஷிவின் கணேஷன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில், அசீம், விக்ரமன், ஷிவின்,ஷெரினா,ரச்சிதா, ஆயிஷா, தனம், விஜே மகேஷ்வரி, ஏடிகே, நிவாஷினி, சாந்தி, ஜிபி முத்து, அசல் கோலாறு, மைனா என 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் சீசன் 6
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை பலர் தெரிந்த முகங்களாகவே இருந்தனர். ஆரம்பம் முதல் இறுதி வரை பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவே இருந்தது. சீரியல் நடிகர் அசீம், அவ்வப்போது ஏடாகூடமான வார்த்தையை விட்டு கமலிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

வாய்க்கு வந்தபடி பேசாதே
அதே போல, அரசியல்வாதியான விக்ரமன், வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும், முதல் ஆளாக வந்து பிரச்சனையை தீர்ந்து வைத்தார். இதனாலேயே அசீமுக்கும் விக்ரமனுக்கும் அவ்வப்போது சண்டை வந்து ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கொண்டனர். அசீம் பலமுறை விக்ரமனை வாடா போடா என்றும், இங்கு கட்டபஞ்சாயத்து செய்யாதே என்றும் வாய்க்கு வந்தபடி பேசிஉள்ளார்.

கடுப்பான ரசிகர்கள்
பிக் பாஸ் வீட்டில் வரம்பு மீறி பேசிய அசீம் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாத பிக் பாஸ் ரசிகர்கள் Boycott Vijay டிவி என தங்களது கோவத்தை வெளிப்படுத்தினர். மேலும்,விஜே மகேஷ்வரி பேட்டியில், அசீம் போன்ற ஒருவரை வெற்றி பெறச் செய்து பெரிய தவறை விஜய் டிவி செய்து விட்டது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பார்
இந்நிலையில், ஷிவின் மற்றும் அமுதவாணன் இருவரும் இணைந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் பேசிய ஷிவின், அமுதவாணன் நைட் போர்வையை போர்த்திக்கு கொண்டு காளியாத்தா, மாரியாத்தா என ஏதோ பேசிக் கொண்டே இருப்பார். நான் பயந்து போய் பெட்ஷீட்டை திறந்துப் பார்த்தால், காற்றில் யாருக்கோ முத்தம் கொடுத்துக் கொண்டு இருப்பார் என்றார்.

தெளிவாக சொல்லுங்க
அப்போது, குறுக்கிட்ட அமுதவாணன், ஷிவின் தெளிவா சொல்லு நான் பெட்ஷீட்டை போர்த்திக் கொண்டு தனியாக தான் இருப்பேன் என்று சொல்லு, இல்லை என்றால், முத்தம் கொடுத்த அமுதவாணன் என்று தலைப்பு போட்டுவிடுவார்கள் என்றார். மேலும்,நைட் தூங்கும் போது கடவுளை வழிபடுவேன் அதைத்தான் ஷிவின் காற்றில் முத்தம் கொடுக்கிறேன் என்று கூறுகிறார் என்றார்.


Click it and Unblock the Notifications











