என்னம்மா டான்ஸ் ஆடுறாங்க நம்ம தாமரை... வியந்து பார்க்கும் ரசிகர்கள்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வி நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைந்து போய் உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா மாரிமுத்து விலகினார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

முதல் தலைவர்
பிக் பாஸ் வீட்டில் நாடகக்கலைஞரான தாமரைச்செல்வி வெள்ளந்தியாக பேசி வருவதையும், அனைவரையும் பாபா என்று அன்போடு அழைப்பதையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இதையடுத்து, இந்த வாரத் தலைவருக்கான போட்டியின் போது இறுதிவரை பலூனை உடையாமல் வைத்திருந்து வெற்றி பெற்றார். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவராக தேர்வானார்.

குடும்ப கஷ்டம்
இதனிடையே, ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் தன் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளையும், அதை எவ்வாறு கடந்து வந்தேன் என்பதையும் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் தாமரை செல்வி கூறியிருந்தார். அதில், குடும்ப கஷ்டம் தாங்க முடியாமல் நாடகக் கலையில் இணைந்ததாகவும், ஒரு நாடகத்திற்கு 200 ரூபாய் கிடைக்கும், பல ஆண்களிடம் கண்ட பேச்சை வாங்கி, பல கஷ்டங்களைத் தாங்கி கொண்டதாகவும், கணவரின் கொடுமை தாளாமல் பிரிந்து 2வது திருமணம் செய்து கொண்டுவிட்டதாக தாமரைச் செல்வி குறிப்பிட்டிருந்தார்.

கதறி அழுத தாமரை
மேலும் தன் மகனை உறவினர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்றும், என் மகனை பார்த்து 4 மாதம் ஆகிறது என்றும் கூறி அழுத தாமரை செல்வி, தன்னைப்பற்றி தவறாக தன் மகனிடம் சொல்லி தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் கூறினார். தாமரைச்செல்வியின் கதையை கேட்ட அபிஷேக்கே தான் நீ ஜெயிக்கனும் என்று கூறினார். அதேபோல அவரின் கதையை கேட்ட பலரும் அவருக்கு ரசிகையாகி விட்டனர்.

நாட்டிய தாரகை
இந்நிலையில், தாமரைச்செல்வி நடனம் ஆடிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில், தாமரைச்செல்வி பாடிக்கொண்டே மிகவும் அருமையாக ஆடுகிறார். பெல்லி டான்ஸ் முதல் உள்ளூர் குத்து டான்ஸ் வரை சும்மா செம்மையாக ஆட்டம் போட்டு ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்துள்ளார். இவரின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருவது மட்டுமில்லாமல். நாட்டிய தாரகை தாமரைச்செல்வி என ரசிகர்கள் அவரை அழைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











