Don't Miss!
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போட்டியாளர்கள் ஓட்டே இவருக்கு தான்...நிகழ்ச்சி பார்க்குறீங்களா...அண்ணாச்சியை கேட்ட கமல்
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் குறைவாக ஓட்டளித்ததால் வெளியேறிய இமான் அண்ணாச்சி, போட்டியில் தொடர்ந்திருந்தால் கேம் வேற மாதிரி சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என சக போட்டியாளர்களில் அதிகமானவர்கள் ஓட்டளித்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து விட்டது. இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. நேற்று சஞ்சீவ் வெளியேற்றப்பட்டதை அடுத்து, தற்போது 7 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இதில் டிக்கெட் டு ஃபினாலேவை வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்று விட்டார் அமீர்.
பிக் பாஸ் சீசன் 5 : சூட்கேஸ் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் ?

வெளியேற்றப்பட்ட நிரூப்
கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வதற்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் முதல் போட்டியிலேயே, இந்த டிக்கெட் பெற தகுதியில்லாதவர் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்கள் சொல்லி, இறுதியில் அதிகமாக 5 பேர் ஓட்டளித்ததால் நிரூப் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் வாரம் முழுவதும் நிரூப் ஏக்கம் மற்றும் கோபத்துடனேயே காணப்பட்டார்.

கேள்வி கேட்ட கமல்
ஃபினாலே டிக்கெட் டாஸ்கின் போது விதிகளை மீறி நடந்து கொண்டது, அப்போது நடந்த சண்டை, தகராறு போன்றவை பற்றி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்களில் கமலும் கேள்வி கேட்டார். வழக்கமாக கேள்வி கேட்டு, யார் மீது தவறு இருக்கிறதோ அவர்களை கமல் கண்டிப்பார். ஆனால் நேற்று அதை வைத்தே ஒரு கேமினை நடத்தினார்.

தகுதியில்லாதவருக்கு ரெட் கார்டு
இங்கு இருப்பவர்களில் தகுதியில்லாத ஒருவர் யார் என தேர்வு செய்து ரெட் கார்டு வழங்க வேண்டும். அதோடு, அவருக்கு பதில் வெளியே போனவர்களில் யார் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டும் என்றார் கமல். இதில் முதலில் கேமை துவக்கிய நிரூப், ராஜுவுக்கு ரெட் கார்டு கொடுத்தார். அவருக்கு பதில் அபிஷேக் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனக்கு டஃப்பாக நான் அவரை பார்க்கிறேன் என்றார்.

இவர் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
சஞ்சீவ் பேசுகையில் வருண் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார். அவரை தவிர மற்ற அனைவருமே இமான் அண்ணாச்சி இருந்திருந்தால் அனைத்து கேம்களும் நன்றாக, சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்றனர். இதை கேட்டுக் கொண்டிருந்த கமல், இங்கு இருப்பவர்களே அண்ணாச்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். அண்ணாச்சி, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என கேட்டார்.

அவர் இருந்திருக்கலாமோ
சக போட்டியாளர்களே இப்படி சொல்லியது பார்வையாளர்களையும் சற்றே யோசிக்க வைத்தது. இவர்கள் இப்படி கேம் ஆடுவார்கள் என தெரிந்திருந்தால், அண்ணாச்சியை வெளியேற்றி இருக்க வேண்டாமே. இவங்களுக்கு பதில் அண்ணாச்சியே இருந்திருக்கலாம் என பலரையும் நினைக்க வைத்தது. ஆனால் நேற்றைய எபிசோட் பற்றி இது வரை இமான் அண்ணாச்சி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.