'அவர் தான் வேண்டும்.. பிடிவாதமாக கேட்டு வாங்கிய கமல்'.. இந்தியன் 2ல் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!
இந்தியன் 2 படத்தில் கமலின் ஆடை வடிவமைப்பாளராக அம்ரிதா ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்ட அம்ரிதா ராம் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து முடிந்துள்ளது. நவம்பர் 3ம் தேதி விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.
வனிதாவின் குட்டி கலாடாக்கள், கவிலியா காதல், சேரப்பாவின் பாசம், சாக்ஷியின் பகை, மீராவின் சீரியஸ் காமெடிகள், ஷெரினின் சாமர்த்தியம், முகெனின் கோபம், அபியின் அழுகை, சாண்டியின் பவர் பாட்டி, தர்ஷனின் நேர்மை, மதுவின் கையறுப்பு, சரவணனின் வெளியேற்றம் என இந்த சீசனின் ஹைலைட்ஸ் பற்பல.

கமலின் காஸ்ட்யூம்ஸ்
இவை அனைத்துக்கும் மேலாக ஹைலைட்டாக ஜொலித்த விஷயம் கமலின் ஆடைகள். வார இறுதி நாட்களில் கமல் வந்து மேடையில் பேசும் போது, அவர் அணிந்திருக்கும் ஸ்டைலான உடைகள் தான் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது.

ஸ்டைலான ஆடைகள்
இத்தனை வயதிலும் இவ்வளவு யங்காக இருக்கிறாரே என கமலை பார்த்து நாம் பொறாமைப்பட காரணமாக அமைந்தது அவரது உடைகள் தான். கமலை இத்தனை ஸ்டையாக காட்டியது ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராம்.

ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா
பிக் பாஸ் சீசன் 3 முழுவதும் கமலின் ஆடைகளை வடிவமைத்தது அம்ரிதா தான். நியூயார்க்கில் உள்ள பேஷன் டெக்னாலஜி கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர் அம்ரிதா. இவரை சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்தியது மிஸ்கின் தான். முகமூடி படத்திற்காக இவர் வடிவமைத்த உடைகள் பெரிதாக பேசப்பட்டன.

வியந்து போன கமல்
இதையடுத்து, ரஜினியின் கபாலி, தனுஷின் வடசென்னை, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் அம்ரிதா பணிபுரிந்திருக்கிறார். கமலுடன் இவர் முதலில் வேலை செய்தது, விஸ்வரூபம் படத்தில் தான். அம்ரிதாவின் திறமையை கண்டு வியந்த கமல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் அவரையே ஆடை வடிவமைப்பாளராக்கிவிட்டார்.

இந்தியன் 2ல் அம்ரிதா
தற்போது அம்ரிதாவை தனது இந்தியன் 2 படத்தின் ஆடை வடிவமைப்பாளராக கமல் நியமித்திருக்கிறார். இதில் 90 வயது கமலுக்கு ஆடை வடிவமைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் அம்ரிதா. இதற்காக பல இடங்களுக்கு சென்று அழைந்து திரிந்து உடைகளை தயாரித்து வருகிறாராம்.

இந்தியன் தாத்தா டிரஸ்
இந்தியன் முதல் பாகம் வந்த போதே, அதில் இந்தியன் தாத்தா உடை, கத்தி உரையுடன் கூடிய பெல்ட், சேனாதிபதி செருப்பு என அனைத்தும் அன்றைய டிரெண்டாக மாறியது. துணிக்கடைகளில் இந்தியன் தாத்தா ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது எல்லாம் தனிக்கதை. அதை வாங்கி அணிந்துகொண்டு பேன்ஸி டிரஸ் போட்டிகளில் இந்தியன் தாத்தா மாதிரி 'குத்தி' காட்டிய 90ஸ் கிட்ஸ் பலர்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
எனவே இந்தியன் 2 படத்தில் சேனாதிபதி அணியப்போகும் உடைக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை பூர்த்தி செய்யும் பொறுப்பு அம்ரிதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கியவர் இந்தியன் 2லும் நிச்சயம் கலக்குவார் என்றே நம்புவோம்.


Click it and Unblock the Notifications











