பிக் பாஸ் எனும் சாபக்கேடு: மீள முடியாமல் தவிக்கும் ஜூலி, காயத்ரி

By Siva

Recommended Video

ஆவேச வீடியோ வெளியிட்ட ஜூலி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு அது சாபக்கேடாக மாறும் பரிதாபம் நடந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மேலும் பிரபலம் ஆகலாம், பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பலரும் வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவர்கள் நடந்து கொள்வதை பார்வையாளர்கள் மறப்பதே இல்லை.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு ஒரு சிலரின் கெரியர் மட்டுமே பிக்கப் ஆகியுள்ளது. மற்றவர்களின் நிலை அப்படியே உள்ளது.

ஜூலி

ஜூலி

பிக் பாஸ் 2 சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் முதல் சீசனின்போது பொய் பேசியதற்காக ஜூலியை நெட்டிசன்கள் இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். காயத்ரி ரகுராமின் நிலையும் அது தான். அவர்கள் என்ன ட்வீட் போட்டாலும் கேவலமாக திட்டுகிறார்கள் நெட்டிசன்கள்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படியே நடக்கிறது என்று அதில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதமும் ஸ்க்ரிப்ட்டின் ஒரு பகுதி என்பதை பார்வையாளர்கள் புரிந்து கொள்வது இல்லை. அதனால் தான் அந்த பிரபலங்களை பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் திட்டுகிறார்கள்.

மோசம்

மோசம்

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததால் நல்ல பெயர் வாங்கிய ஓவியா 90 எம்.எல். படத்தில் மோசமாக நடித்ததை பார்த்தவர்கள் அந்த நேரம் மட்டும் ஜூலியை பாராட்டினார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம தமிழச்சி ஜூலி தரம் தாழ்ந்து நடிக்க மாட்டார் என்றார்கள். பின்னர் பழையபடி ஜூலி போலி என்று அவரை திட்டத் துவங்கிவிட்டனர்.

இந்தி

இந்தி

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததால் மும்தாஜும் நெட்டிசன்களிடம் நிறைய திட்டு வாங்கிவிட்டார். தாடி பாலாஜியின் மனைவி நித்யாவையும் நெட்டிசன்கள் சும்மா விடவில்லை. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் இதே நிலை தான். இந்திக்கார நெட்டிசன்கள் அவர்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா

சினிமா

சினிமா ஆசையில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இப்படி பிரபலங்கள் திட்டு வாங்குவது நியாயம் இல்லை. பணத்தை வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அவர்கள் சொல்படி தானே நடக்க முடியும். அதை பார்வையாளர்கள் புரிந்து கொண்டு முன்னாள் போட்டியாளர்களை தொடர்ந்து கேவலமாக திட்டுவதை நிறுத்த வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X