நக்கலா பாட்டு பாடுற… செவுலில் ஓங்கி அறைவிடுவேன்.. வரம்பு மீறி பேசும் இசைவாணி !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த இசைவாணித் தொல்லை தாங்க முடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு திரும்பும் பக்கம் எல்லாம் சண்டை போட்டு வருகிறார்.

இந்த பக்கம் அண்ணாச்சி கூட சண்டை, அந்த பக்கம் தாமரைக்கூட சண்டை என, எப்போ பார்த்தாலும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு திரிகிறார் இசைவாணி..

கடல்ல இருக்கு நண்டு.. இந்த பிரச்சினைக்கு இல்லையா சார் எண்டு என கலாய்க்கத்தான் தோன்றுகிறது.

உனக்கு புத்தி இருக்கு

உனக்கு புத்தி இருக்கு

பிக் பாஸ் 5 ல் நேற்றைய எபிசோடில் தாமரை இசைவாணியின் கண்ணாடியாக பேசினார். இயல்பாகவே உனக்கு நிறைய அறிவு இருக்கு, ஆனால் பல நேரம் அறிவு இல்லாத மாதிரி நடந்துக்கிற, எனக்கு எதுவுமே புரியல என நீங்க சொல்றீங்க, உனக்கு புத்தி சொல்லும் அளவுக்கு எனக்கு புத்தி இருக்கிறது. அன்று நான் ஒரு விஷயம் சொல்ல வர நீ கையெடுத்து கும்பிட்டது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது அடுத்தவங்க என்ன சொல்றாங்கனு கேளு என்றார்.

பாட்டு பாடிய தாமரை

பாட்டு பாடிய தாமரை

இதையடுத்து இனிமேல், பேச ஒன்னும் இல்லை என்று கூறி, கையை பிடித்துக் கொண்டு, தாமரைக் கன்னங்கள் பாடலை பாடினார், அடுத்ததாக தினமும் சிரிச்சி மயக்கி என் மனச கெடுத்த சிறுக்கி என்ற பாடலை பாடினார். இதற்குள் மணி அடித்ததால் இருவரும் கைகளை விட்டுவிட்டு சென்றனர்.

பார்த்து நக்கலா பாட்டு பாடுற

பார்த்து நக்கலா பாட்டு பாடுற

தாமரை பாடிய பாட்டால் கடுப்பான இசைவாணி, என்னை பார்த்து நக்கலா பாட்டு பாடுற என்று கேட்கிறார். உன்னை பற்றி பேச வேறு எதுவும் இல்லாததால் பாட்டுப்பாடினேன் என்றார் தாமரை. மனசாட்சியோடு சொல்லு.. நீ நக்கலாக பண்ணியா இல்லை சந்தோசத்திற்கு பண்ணியா.. என இசைவாணி கேட்டார். நான் சந்தோசத்திற்கு தான் பாடினேன். உன்னை பார்த்து நக்கலா பாடல என்கிறார். அது பார்க்கும் மக்களுக்கு தெரியும் என இசைவாணி சொல்ல, என்னை மட்டும் மக்கள் பார்க்கல.. உன்னையும் தான் பாத்துட்டு இருக்காங்க என்று மாறி மாறி சண்டை போட்டுகொண்டு இருக்க பிக்பாஸ் குறுக்கிட்டதால் சண்டை சமாதானமானது.

வரம்பு மீறி பேசும் தாமரை

வரம்பு மீறி பேசும் தாமரை

இதையடுத்தும் ஆத்திரம் தீராத இசைவாணி, உனக்குமேல நான் கத்துவேன் ஷோன்னு பார்க்கிறேன், இல்லைனா செவுலில் ஓங்கி அறைவிடுவேன் என்று கூறுகிறார். இசைவாணியின் இந்த பேச்சு வரம்பு மீறிய பேச்சு என்று நெட்டிசன்ஸ்கள் கூறி வருகின்றனர். தாமரைக்கு நெட்டிசன்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். மேலும் இந்த வாரம் இசைவாணி தான் எலிமினேஷன் என்றும் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X